நடக்குமா நடக்காதா என்று வாய் சவடால்களும் தொடர்ந்து கொண்டு இருக்க நலமாக முடிவடைந்து இப்படி சொல்வதை விட வெற்றிகரமாக இறைவனின் துணை கொண்டு நடந்து நிர்வாகமும் அமைக்கப்பட்டது புதிய நிர்வாகத்தை இணையதளம் வரவேற்கிறது கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வெற்றிவாகை சூடியவர்கள் இனி எப்படி நடக்கபோகிறார்கள் இறை அச்சத்தோடா அல்லது பழையபடி தான்தோன்றித்தனமாக நடக்கபோகிறர்களா என்பதை மக்கள் ஆவலாக எதிர்நோக்கி உள்ளார்கள்.
முதலில் வெற்றிபெற்றவர்கள் யார் யாருக்கோ நன்றி சொல்லி உள்ளார்கள் குறிப்பாக அவர்கள் நன்றிதௌஹீத் ஜமாஅத்திர்க்குதான் தெரிவிக்கவேண்டும் காரணம் அவர்கள் பேரை பயன்படுத்தியதால் தான் வெற்றி கிட்டியது நாம் சொல்லி தெரியவேண்டியது இல்லை இரண்டாவதாக வெற்றி பெற்றவர்கள் இறுமாப்பு கொள்ளாமல் இறைவனுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள் இதை சொல்ல காரணம் புதியதாக தேர்ந்து எடுக்கப்பட்ட ஒருவர் அவர் தெருவில் உள்ளவரை மிரட்டியதாக காவல்துறையில் புகார் செய்யப்பட்டு அந்த தேர்ந்து எடுக்கப்பட்ட நிர்வாகியை கண்டித்து அனுப்பியதாக செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தோம் புதியதாக தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் தயவு செய்து திருந்தி கொள்ள வேண்டும் காரணம் உங்களை நம்பி வாக்களித்தவர்கள் உங்கள் மேல் நம்பிக்கை வைத்துதான் வாக்களித்து இருகிறார்கள்.
தேர்தல் என்று வந்து விட்டால் வெற்றி தோல்வி நிச்சயம் வெற்றியை மட்டும் நம்பி யாரும் நிற்பதில்லை தேர்தல் முடிந்தவுடன் ஊரின் ஒற்றுமையை நினைத்து சந்தோசம் அடைந்தோம் நாம் இணையதளத்தில் இது சம்பந்தமாக வெற்றி செய்தியை மட்டும் போட்டோம் மற்ற நிகழ்வுகளை கவனித்து கொண்டு இருந்தோம் தவறு என்று தெரிந்தால் கண்டிப்பாக அதை யாருக்கும் பயப்படாமல் தைரியமாக சொல்ல கடமை பட்டு உள்ளோம் நம்மை கேவலமாக விமர்சனம் செய்வதையும் நாம் அறியாமல் இல்லை இதனால் நாம் கோபப்பட போவதில்லை காரணம் ஏது ஒற்றுமையாக இருக்க தேவையோ அதை கண்டிப்பாக நாம் சொல்வோம் ஒரு விசயத்தில் நமக்கு புலப்படாத ஒன்று ஒரு இணையதளத்தில் எல்லா விசயங்களையும் ஆராய வேண்டி இருக்கும் அதற்க்கு ஒரு எல்லை இல்லை தேவை இல்லாமல் எங்கள் ஊரை பற்றி எழுத இவர்கள் யார் என்று கேட்பது வேடிக்கையாக இருக்கிறது உங்கள் ஊரில் நடக்கும் நல்ல நிகழ்ச்சிகளையும் கண்டிப்பாக ஒளிபரப்பு செய்கிறோம் நீங்கள் அனுமதித்தால் உங்கள் ஊரில் இணையதளம் நடத்துபவர்கள் முன்னால் இருந்த நிர்வாகிகளுக்கு பயந்து கொண்டு தன் கருத்துகளை சொல்வதில்லை பயம் தான் காரணம் நாம் இந்த இணையதளத்தை நடத்த காரணமே நண்பர்கள்தான் இதற்க்காக யாரிடமும் எந்த பொருளுதவியும் பெற்று கொண்டு அவர்களுக்கு ஆதரவான நிலையை எடுக்க மாட்டோம் சிலர் லட்ச கணக்கில் பணம் தருவது கூட தயாராக இருந்தார்கள் பேரம் பேசினார்கள் ஆனால் எதற்கும் அஞ்சாமல் தைரியமாக போட்ட கட்டுரையை எடுத்தது கிடையாது .
இப்போது கூட பச்சை துரோகம் : முட்டாள் தொண்டனும் அடி முட்டாள் தலைவனும்என்ற தலைப்பில் கட்டுரை வெளியீட்டு இருக்கிறோம் அதற்க்கு எதிர்ப்புகள் வரத்தான் செய்யும் நண்பர்களை பிரிய நேரிடும் என்பது தெரியும் ஆனால் உண்மையை சொல்லவேண்டும் என்ற நோக்கில் அதை எழுதி இருந்தோம் நாம் வெளி உலகுக்கு வர காரணமாக இருந்த என் சகோதரன் P.ஜெயினுலாப்தீன் என்ற சகோதரன் தான் காரணம் அவர் தவறு செய்யும் போது தட்டி கேட்க வேண்டுமே என்ற நோக்கத்தில் தான் இந்த கட்டுரையை எழுதி இருந்தோம். நம்மை நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவிற்கு அழைக்கவில்லை காரணம் இணையதளத்தில் எழுதி விடுவோம் என்ற பயம் காரணமாக இருக்கலாம் நாம் கேட்ட வகையில் சகோதரர் அலி அவர்கள் கலந்து கொண்டது மிகவும் சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் சகோதரர் ஜெகபர் அலி பதவி ஏற்பு விழாவில் கூறிய கருத்துக்கள் முகம் சுளிக்கும் படியாக இருந்ததாகவும் அதை அங்குள்ள அனைவரும் கண்டித்ததாகவும் செய்தி அறிந்து சந்தோசம் அடைந்தோம் புதிய நிர்வாகிகளுக்கு நம் இணையதளத்தின் சார்பாக வைக்கப்படும் கேள்விகள் .
- பள்ளிவாசல் கட்டிட கணக்கு சம்பந்தமாக கிளியனுரில் தணிக்கை குழு என்ற ஒரு குழுவை ஏற்படுத்தி அணைத்து கணக்குகளையும் தணிக்கை செய்து சில தவறுகளை கண்டுபிடித்து வெள்ளை அறிக்கை சமர்ப்பித்து இருந்தார்கள் . அதேபோல் நேர்மையான முறையில் தணிக்கை குழு அமைத்து கணக்கை பார்க்க வேண்டும் தவறு இருப்பின் மன்னித்து விடலாம் ஆனால் மக்களுக்கு விளக்க படுத்த வேண்டும்
- பள்ளிவாசல் கடைகள் இது வரை வாடகை உயர்த்தாமல் அறிந்து அதிர்ச்சி அடைந்தோம் காரணம் வருடாவருடம் வாடகை உயர்த்தி கிளியனுரில் கடை வசூல் செய்து வருகிறார்கள் பாக்கி வைத்து இருப்பவர்களை பேனர் வைத்து விளம்பர படுத்துவார்கள் இதற்க்கு பயந்து கொண்டு வாடகை பாக்கியை உடனடியாக கட்டி விடுவார்கள் இந்த முறையை பின்பற்றலாம்
- புதியதாக ஒரு நபரை நிர்வகதிர்க்குள் புகுத்தி இருகிறீர்கள் இதை தவறு என்று மக்கள் கூறுவதை நாம் கேட்டபின்தான் எழுத்துகிரேன் காரணம் தோல்வி அடைந்த ஒருவரை நியமிப்பது குரூப் பாலிடிக்ஸ் நீங்களும் கடைபிடிக்க தொடங்கி விட்டீர்களோ ? தோற்ற அனைவருக்கும் பதவி கொடுத்திருக்க வேண்டும். அதேபோல் உங்க அணியில் பாதிபேர் தோற்றுப்போயிருந்தால் அவர்களுக்கும் பதவியில் அமர்த்தி இருப்பிர்களா ?என்ற கவலை நமக்கு நியமித்து விட்டீர்கள்!! மக்கள் மனதில் எழுந்த சந்தேகத்தை எழுத வேண்டும் என்ற நோக்கில் எழுதுகிறேன் .
- குறிப்பாக இளைஞர்கள் வெற்றி பெற்றதை நினைத்து சந்தோசம் அடைந்தேன் அவர்களை அலட்சியப்படுத்தாமல் எந்த ஒரு முடிவெடுத்தாலும் அனைவரின் கருத்துகளையும் பதிவு செய்து யார் எதிராக கருத்துகளை பதிவு செய்கிறாரோ அந்த கருத்துகளையும் பதிவு செய்யுங்கள் காரணம் இது இஸ்லாமிய வழிமுறை நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் நாம் மக்களுடன் மக்களாக குறிப்பாக நீடுர் இணையதளம் நடத்தி வரும் சகோதரர் உண்மை நிலையை யாருக்கும் பயப்படாமல் தன கருத்துகளை பதிவு செய்துள்ளார் அந்த கருத்துகள் நம்மை கவரந்ததால் அப்படியே நம் இணைய நேயர்களுக்காக தந்துள்ளோம்
“ரெண்டு குழுவும் சேர்ந்துதான் புதிய நிர்வாகத்தை அமைப்பாங்க!” என்பதுதான் எல்லோரது டயலாக்-ஆகவும் விருப்பமாகவும் இருந்து வந்தது.தேர்தல் வேண்டாம் என்றுக் கூறி அதற்கான தடை உத்தரவை எந்த வடிவத்திலாவது வாங்கிவிட வேண்டும் என்று கடைசிவரை கடினமாக முயற்சித்த குழுவினர் எப்படி இப்படியொரு அமோக வெற்றியைப் பெற்றார்கள்? அப்படி என்ன அலை ஊரில் வீசியது? வெற்றியும் தோல்வியும் பொது வாழ்க்கையில் ஒரு பெரிய விஷயமே இல்லை. ரகசிய வாக்கெடுப்பு என்கிற நிலைபாடு முதலில் வென்றிருக்கிறது. ஆனால் இந்த நிலைபாட்டை முன்மொழிந்து முழு வேகத்தில் முயற்சித்தவர்கள் ஏன் படுதோல்வி அடைந்தார்கள்?
இது தொடர்பாக ஜமாஅத்தார்களின் எண்ண ஓட்டங்களை அறிய முற்பட்டபோது பல உண்மைகள் தெளிவாகி உள்ளன. எந்த 18 வயதினரின் ஓட்டு பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஒரு குழுவினர் அஞ்சினார்களோ, அந்த இளைஞர்களின் வாக்குகளே அவர்களின் வெற்றிக்குக் காரணமாகியுள்ளது.
முதலில் இரண்டு குழுவினரின் அணுகுமுறையிலும் மிகப்பெரிய வித்தியாசம் இருந்திருக்கிறது. தேர்தலுக்காக முயற்சித்த அணி ஜமாஅத்தார்களிடம் இரண்டர கலக்க முயலவில்லை. பல வேளைகளில் பலரிடமும் முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்றது, வீடு தேடி சென்ற கண்ணியமிக்க குடும்பத்தைச் சார்ந்த சகோதரர்களையும் வெளியேறும்படி மும்முறை Get Out சொன்னது ஆகியவையெல்லாம் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. அதேசமயம் ஜமாஅத்தார்களை வலிய அழைத்துப் பேசுகின்ற தேர்தல் வேண்டாம் எனும் அணியினரின் அணுகுமுறை வெகுவாக வேலை செய்திருக்கிறது என்பதை பலரது பதில்களின் மூலம் அறிய முடிகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக இறுதியாக தேர்தல் வேண்டாம் எனும் அணியினர் எடுத்த ஆயுதம் மிகவும் Sensitive-ஆன ஒன்று.
“மாக்காண்டி வருகிறான். சாக்குப்பையில் அள்ளிக் கொண்டு போய்விடுவான்” என்று குழந்தைகளை பயம் காட்டுவதைப்போல் “நஜாத்” என்கிற ஆயுதத்தை எடுத்து தீவிரப் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி இருக்கிறார்கள். தேர்தல் வேண்டும் எனும் அணியினருக்கு ஓட்டளித்தால் இனிவரும் காலங்களில் தராவீஹ் 8 ரக்க அத்கள்தான் என்கிற பிரச்சாரத்தையும் பலமாக செய்திருக்கிறார்கள். உண்மையில் ஊரில் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டப்படுவதை ஜமாஅத்தார்கள் ரசிக்கவில்லை. எனவே இந்த பிரச்சார யுக்தி ஒரு பெரிய அலையை உருவாக்கியுள்ளது.
இந்த பிரச்சாரத்தை எதிர்கொள்ள தேர்தல் வேண்டும் எனும் அணி முயற்சித்ததாகத் தெரியவில்லை. அல்லது அவர்களின் முயற்சி வெற்றிகரமாக அமையவில்லை.
விளைவு பலரும் சிறிய ஒட்டு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழக்கும் நிலை உருவாகியது.
எது எப்படியானாலும் தற்போது புதிதாக பொறுப்பேற்றிருக்கின்ற நிர்வாகத்தினரும் நமது சகோதரர்களே. அனைவரின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்கக்கூடியவர்களாக உள்ளார்கள். அவர்கள் ஊர் ஒற்றுமைக்காகப் பாடுபடுவதாக உறுதியேற்றிருப்பதாக அறிகிறோம். அண்ணன், தம்பிகளாக வாழ்வோம் என்றும் உறுதி கூறுகிறார்கள். தேர்தல் வேண்டும் எனும் அணியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட M.A.முஹம்மது அலியும் முழு ஈடுபாட்டுடன் மகிழ்வுடன் பணியாற்ற இருப்பது நல்ல துவக்கம்.
தேர்தல் மாறுதல் தரும் என்பதற்காக இரு அணிகளாக போட்டியிட்டாலும் இனி நாம் அனைவரும் ஓரணியினரே என்கிற ஒற்றுமை எண்ணம் மலர வேண்டும்.
பொறுப்பில் இல்லாவிட்டாலும் ஊர் நிர்வாகத்துடன் சேர்ந்து தொண்டாற்றுவதன் மூலம் பொதுமக்களின் நன்மதிப்பையும், அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தையும் பெறலாம். இறைவன் நாடினால் அடுத்த தேர்தலில் நிர்வாகத்திற்கும் வரலாம்.
courtesy to: www.kiliyanur.net