ரகசிய வாக்கெடுப்பிற்கு ஜமாத்தார்களின் ஆதரவோடு முயற்சிசெய்து கொண்டு இருக்கின்ற MAP.தாஜ் அவர்களின் மீது பொய்யான புகார் ஜாமியா மஸ்ஜித் நிர்வாக லெட்டர் பேடில் சிலரால் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் கொடுக்கபட்டது.புகார் என்னவென்றால் MAP.தாஜ் அவர்கள் அவதூறு பேசுவதாகவும், குழப்பம் விளைவிப்பதாகவும், ரகசிய வாக்கெடுப்பை சீர்குலைக்க முயல்வதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது! நமதூர் ஜமாத்தினருக்கு ரகசிய வாக்கெடுப்பை வலியுறுத்துவது யார்? தேர்தலை கெடுக்க நினைப்பது யார்? என்பது நன்கு தெரியும்!! MAP.தாஜ் அவர்கள் காவல்நிலையம் சென்று தற்போதைய சூழ்நிலையை உரிய ஆவணங்களோடு விளக்கி உள்ளார். ரகசிய வாக்கெடுப்பை உயர்நீதிமன்றம் சென்று உத்தரவை பெற்றதே தாங்கள் தான் என்றும், உண்மை அப்படி இருக்க நானே தேர்தலுக்கு இடையூறாக இருப்பேனா? என்று விளக்கம் அளித்துள்ளார்!! ஊரில் நடந்த பல சம்பவங்களை அவர் சொன்னபோது புகாராக வேண்டுமானால் கொடுங்கள் என்று காவல் துறையினர் கூறியுள்ளனர்.ஆனால் MAP.தாஜ் அவர்கள் " புகார் ஒன்றும் வேண்டாம்..அமைதியாக தேர்தலை நடத்த பாதுகாப்பு செய்து தாருங்கள்"என்று கூறியுள்ளார். அவருடன் ஜமாத்தை சேர்ந்த பலரும் காவல்நிலையம் சென்றுவந்தனர். இதில் வேடிக்கை என்னவென்றால் இவர் மீது புகார் கொடுத்தவர்களில் முதல் நபர் முன்பு MAP.தாஜ் அவர்களை ஊர் பஞ்சாயத்திற்கு தூக்கிச்செல்ல வந்த ஐவரில் ஒருவர்!! ஒருவர் தற்போது நாட்டாமை தேர்தலில் போட்டியும் இடுகிறார். (இது சம்பந்தமாக முன்பே எழுதி இருந்தோம்) அப்போதே MAP.தாஜ் அவர்கள் அந்த சம்பவத்திற்கு ஒரு புகார் கொடித்திருக்கலாம், ஆனால் பொறுமை காத்தார். தற்போதும் பொறுமையுடன் தான் செயல்படுகின்றார். அவர் நினைத்திருந்தால்,இடைக்காலத்தி ல் தற்போது தேர்தலில் போட்டியிடும் மூன்று நபர்களை மிரட்டியதற்குகூட புகார் அளித்திருக்கலாம்.ஆனால் அதை அவர் செய்யவில்லை.சுமூகமாக போகவே அவர் விரும்பினார். அவர் ரகசிய வாக்கெடுப்பிற்கு முயன்றார் என்பதனாலேயே அவருக்கு பலவிதமான நெருக்கடிகளை கொடுத்து வருகின்றனர். முன்பும் ஒருமுறை ஊர் நிர்வாகத் தேர்தலுக்காக ஆலோசனை கூட்டம் ஏற்பாடு செய்ததிற்கு காவல் துறையில் அவர்மீது புகார் அளித்தனர் முன்னால் நிர்வாகிகள்! அவர் என்ன தவறு செய்தார்? பெரும்பான்மையான ஜமாத்தார்களின் விருப்பத்திற்கேற்ப ஜமாத் நிர்வாகிகள் தேர்தலை,ஜமாத்தார்கள் ரகசியமான முறையில் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்க வேண்டும் என பலமுறை வலியுறுத்தி பலனில்லாத போது,உயர் நீதி மன்றம் சென்று ரகசிய வாக்கெடுப்பிற்கு உத்தரவை பெற்றார். ஊரில் உள்ள ஜமாத்தார்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஜமாத்தார்களின் ஆதரவோடு தான் ரகசிய வாக்கெடுப்பிற்கான முயற்சியை செய்து வருகின்றார். எப்படியோ உண்மை நிலவரத்தை விளக்கியதன் மூலம் நீங்கள் பொய்யர்கள் என்று காவல்துறையினருக்கு நன்கு விளங்க நீங்கள் கொடுத்த புகாரே போதுமானதாக ஆனது.பொய்யான புகாரை கொடுத்து யாரையும் தண்டிக்க நினைக்காதிர்கள்!! அல்லாஹ் எல்லாவற்றையும் பார்த்துகொண்டு இருக்கின்றான்!! அவர்கள் ரகசியவாகெடுப்பிற்கு ஏற்பாடு செய்துகொண்டு இருந்தால்..அதை ஏன் உங்களுக்கு எதிரான செயலாக பார்க்கின்றீர்கள்?இதுபோல் பொய்யான புகாரை கொடுத்து ரகசிய வாக்கெடுப்பிற்கு முயல்பவர்களை நெருக்கடிக்கு ஆலாக்கினால்..யாரும் ரகசிய வாக்கெடுப்பை கோர மாட்டார்கள் என்று எண்ணாதீர்கள்! நமதூர் ஜமாத்தினர் நியாயத்தின் பக்கம் தான் இருப்பார்கள்!! இனிமேலும் பொய்யான அவதூறுகளை பரப்பாமலும் மிரட்டாமலும் தேர்தலை எதிர்கொள்ளுங்கள் !!அல்லாஹ் நல்லவர்களுக்கு வெற்றியை தருவானாக.!! ஆமீன்!!
MAP .தாஜ் யாருப்பா இந்த தாஜ் கால காலமாக ஊரை நடத்திகொண்டிருந்த போது
ReplyDeleteஊரில் ஊழல் நிறைந்து நடந்து கொண்டிருந்த போது தட்டி கேட்காத தாஜ் இரண்டு
மூன்று வருடமாக ஊரில் அக்கறை உள்ளவர் போல் கட்டி கொள்ளும் தாஜ் பதவி
என்ற ஆசை இப்போ வந்து விட்டதா .
ஆமாம் நவ்சாத் உங்களுக்கும் இந்த MAP .தாஜுக்கும் என்ன சொந்தம் அல்லது
அவர் பணத்தில் உன்னிடம் என் புகழ் பாடு என்றார இந்த தாஜ் பெயரை கேட்டு
காது புளிச்சி போய்டுச்சு அல்லது வரும் நாடாளு மன்ற தேர்தலில் அவரை உங்கள்
அமைப்பு சார்பாக நிற்க வைக்க போகிறீர்களா .
பல ஆண்டு காலமாக ஊரை நிர்வகிதவர்களும் திருடி விட்டார்கள் பள்ளிவாசலில்
கொள்ளை அடித்து விட்டார்கள் என்று சொல்லி கொண்டே இருகிரீர்கலே இந்த நிர்வாகத்தின்
கணக்கு நிர்வாக மாற்றத்திற்கு பிறகு தானே தெரியும் ஆனால் அவர்கள் கொள்ளை
அடித்து விட்டார்கள் எப்படி உங்கள் கூட்டம் சொல்கிறது .
பள்ளிவாசல் காசு மீது உங்களுக்கும் ஆசை வந்து விட்டது இந்த நிர்வாக மற்றம் மூலம்
அதை சாதித்து விடலாம் என்று நினைகிறீர்கள் நம் மனதில் உள்ளதை அல்லாஹ் அறிவான்
அல்லாஹ் அல்லாஹ் என்று அனைத்து வித பாவம் செய்தாலும் தண்டனை தண்டனையே .
சற்று யோசித்து செயல் படுங்கள் தனி நபர் புகழ் பாடுவது இஸ்லாத்தில் அனுமதி இல்லை
ஆனால் நீங்கள் அதிகமாக ஒரே பக்கமாக பேசுகிறீர்கள் இது நமக்கும் நம் நிர்வாகத்தில்
உள்ளவருக்கும் கெடுதலாக அமையும்.
தனி நபர் விமர்சனம் கூடாது
ReplyDeleteநமக்கும் தாஜ் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவரின் புகழ் பாடவுமில்லை. ரகசிய வாக்கெடுப்பு நடக்க வேண்டும் என்பது நம் ஜமாத்தினரின் பெரும்பாலானோரின் விருப்பம். அதற்கு யாரும் முன் வராத நிலையில் தாஜ் அவர்கள் அதற்காக முயன்றார். அதற்காக ஏன் அவர்மீது வீண் பழி மற்றும் அவதூறு. காசுக்காக எழுத வேண்டிய நிலையில் அல்லாஹ் என்னை வைத்திருக்கவில்லை, அல்லாஹ் பாதுக்காப்பானாக! இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக தாஜ் அவர்கள் தவறு செய்தாலும் சுட்டி காட்ட தவற மாட்டோம். இந்த இணையதளம் மூலம் உளருகிறேன், வெளி உலகிற்கு காட்ட முற்படுகிறேன் எனவும் சிலர் கூறி வருகின்றனர். என்னை வெளி உலகிற்கு தெரியபடுத்தி புகழ் அடைய ஒருபோதும் நினைத்தது கிடையாது, அதற்கான் அவசியமும் இல்லை. அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்.
ReplyDeleteதனி மனித புகழ் பாடுவதனால் அவர்களை பற்றி நமக்கு தெரிய
ReplyDeleteவேண்டும் அல்லவா அதனால் தான்.
அப்போ இந்த தாஜ் என்பவரால் இந்த மறைமுக வாக்கெடுப்பு என்று
சொல்கிறீர்கள் இதில் மறைமுகமாக செயல் பட்டவர்கள் அனைவரின்
உழைப்பை குப்பையில் தூக்கி போட்டு விட்டீர்கள் அல்லாஹ் அறிவான்
இந்த ஊரின் மீது அக்கறை உள்ளவர்கள் ஒற்றுமை விரும்புபவர்கள்
யாரென்று நீங்கள் மீண்டும் விளக்கம் என்ற பெயரில் தாஜ் வர்களை பற்றி
தனி மனித புகழ் படவேண்டாம் .
வேட்பாளர்கள் அனைவரும் நமதூர் ஜமாத்தை சேர்ந்தவர்கள் என்று கூறிவிட்டு ஒரு சாராரை பற்றி தாக்கி பேசுவதும் மற்றொரு சாராரை உயர்த்தி பேசுவதும் நடு நிலைமை கிடையாது.
ReplyDeleteதன்னை சார்ந்தவர்கள் என்ன செய்தாலும் அது சரி என்று வாதிட தயாராக இருக்கிறார்கள். அதில் விளம்பரமும் தேடி கொள்கிறார்கள்.
அஹ்மத்
பொய் புகார் கொடுத்தவர்கள் ஊர் நிர்வாக லெட்டர் பேடில் நிர்வாகத்தில் இல்லாத சிலரும் கையழுத்து போட்டு கொடுத்துள்ளார்கள்.பொய்யான புகாருக்கு ஊர் லெட்டர் பேடை பயன்படித்திக்கொள்ள இடைக்கால நிர்வாகிகளுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?ஜமாத்தார்களே இவர்களை தெரிந்துக்கொள்ளுங்கள்!!அதிகார துஷ்பிரோக்கியம் அத்துமீறுகிறது!ஜமாத்தார்களே உஷார்!!!
ReplyDeleteMr.Sirajudeen
ReplyDeleteஅவர்களே பள்ளிவாசல் கணக்கை பல முறை கேட்டுப்பார்த்தாச்சு ! இவர்களிடம் மிரட்டல் தான் வந்ததே தவிர கணக்கல்ல பல வெளிநாடுகளில் நமது பள்ளிக்காக வெளீயூர் காரர்களிடம்
வாங்கிய தொகைக்கு இன்னும் ரசீது வழ்ங்கப்படவில்லை அழைத்து சென்றவர்களுக்கு தான் நெருக்கடி.மற்ற நல்ல காரியங்களுக்கு எப்படி நமதூர் சார்பாக அவர்களிடம் மீண்டும் செல்வது. நீடூராணகிய என்னிடம்
வசூல் செய்த நபர் கடைத்தெருவில் வைத்து நீங்கள் எழதிய தொகை வந்து சேரவில்லை என்றார்கள் உடனே எனது தந்தையிடம்
வீடு வந்து கேட்டால் அவர் என்னிடம் பணம் கொடுத்த ரசீது காட்டுகிறார் அதைப் பெற்றுக்கொண்டு நிர்வாகியிடம் விபரத்தை கூறினால் அவ்ர் சிரித்துக்கொண்டு ஓ வந்துவிட்டதா என சிரிக்கிறார். இதை வெறும் திரித்துக்கூறுவதற்ககாகவோ யாரோ வெல்லுவதற்க்காகவோ கூறவில்லை சகோதரரே, இது உண்மை அல்லாஹ்வை அஞ்சிக்கொண்டு சொல்கிறேன்
அந்த லட்சணத்தில் நிர்வாகம் இருந்திருக்கிறது ,இப்படி சீர்கெட்ட நிர்வாகத்தை என்ன சொல்வீர்கள் நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா. அப்ப சகோதரர் நவ்சாத் உங்களுக்கு என்ன சம்பந்தம் என கேட்கிறீற்களே, இப்ப அதே கேள்வியை யார் வேண்டுமானலும் நம்மிடல் கேட்களாம்,வேண்டாம் சகோதரரே நம்ம்முடைய கோபத்தால் எதையும் பேசிவிடலாம். தாஜுதீன் பற்றி அதிகிய செய்திகள் வருவதற்கு அவரு காரணமல்ல நவ்சாத்தும் காரணமல்ல, அவர் ஒதுங்க ஒதுங்க ஓட ஓட துரத்துகிறார்களே அவ்ர்கள் தான் காரணம், அவர் எதாவது விளம்பரத்திற்காக செய்துக்கொண்டாரா, உண்மைக்காக ஓடி ஓடி நீதிமன்றம் காவல்துறை ஏறிக்கொண்டிருக்கிறாரே அதுவே இவரிடம் தவறு இருந்தால் இந்த இடங்களில் இவருக்கு ஏதாவது செல்வாக்கு இருக்கிறதா? அல்லது இவரை விரட்டுகிறவர்களுக்கு அவர்களுக்கு
செல்வாக்கு அதிகமா என உங்கள் மனசாட்சிக்கு தெரியும், இவருக்கு பதவி ஆசையில் இருந்தால் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது இவர்கள் சார்பாக போட்டியிட்டவர்களின் பெயர் பட்டியளை பாருங்கள் இவரின் பெயர் கடைசியில் தான் வருகிறது
பதவி ஆசையில் உள்ளவர்கள் தாங்கள் பெயரை தான் முதலில் வெளியிடுவார்கள்.நன்றாக புரிந்துக்கொள்ளுக்கொள்ளுங்கள் இன்று நடக்கும் பேராட்டம் நமக்கல்ல இது நம்முடைய எதிர்காலத்திற்காக
நம்முடைய சந்தாதினர்களுக்காக நடக்கும் போராட்டம் நம்ம பிள்ளைகள் அமைதியாகவும் சகோதரத்துடனும் வாழவேண்டும், இல்லா விட்டால் ஜும்மாவிற்க்கு சென்று வ்ந்து தந்தையே நான் இன்னக்கி ரெண்டு பேர அடிச்சியேன், சட்டைகிழ்ச்சியென் வந்து சொல்லிக்கொண்டு இருப்பார்கள் கடைசியில ஏன் அப்படி செய்தன்னு கேட்டால் எல்லாம் செய்தார்கள் நானும் செய்தேன் என்பார்கள் பிறகு தொட்டில் பழ்க்கம் தான், கடைசி வரை , நம்ம பிள்ளையை வீட்டில் வைத்து வளர்க்கமுடியாது, அது சமுதாயத்தில் வளரும் போது அது எப்படி இருக்கிறதோ அப்படி தான் அவர்கள் வளருவார்க்ள், நமது வாழ்க்கையில் 3 கட்டங்கள், ஒன்று சிறுவயது பருவம் 2 பொருள் ஈட்டும் காலம் 3 முன்று 50-60 வய்து நாம் கற்றதையும் அனுபவத்தையும் அடுத்த சந்ததினறுக்கு எடுத்துவைக்கவேண்டும் அப்போது 2ஆம் கட்டத்தில் உள்ள நாம் தற்போது வெளிநாடுகளில் இருக்கிரோம், இப்போது ஊரில் இருப்பது நமது குழந்தைகள் மற்றும் நிர்வாகிகள்
அதனால் ஊரை நெரிப்படுத்த வேண்டு நிர்வாகிகள் தவரான பாதையை நமது பிள்ளைகளுக்கு வழங்கிவிடக்கூடாது,
நாம் சிறு பிள்ளையாக இருக்கும் போது இருந்த் காலம் சென்ற நமது முன்னோர்கள் நமக்கு கற்று தந்த் கண்ணியத்துடண் நாம் வெளி நாடுகளில் வாழ்கிறோம். நாம் இனி வரும் காலங்களில் நமது சந்ததியை உருவாக்குவோம்
தேர்தலில் யார் வேண்டுமானாலும் வெல்லட்டும், யாராக இருந்தாலும் நீதீ நேர்மை மற்றும்
கண்ணியத்தை காக்க கூடியவரர்களாக இருக்க வேண்டும்
அப்படி இல்லை என்றால் இனி வரக்கூடிய காலங்களில் மக்கள் அவ்ர்களை அடித்து விரட்ட வெகு காலம் ஆகாது என்பதை உணர்தவர்கள் மட்டும் தேர்தல் களத்தில் வென்று வரட்டும் அப்படி தவரான நிர்வாகம் வரக்கூடிய காலங்களில் நவ்சாத் போன்றவர்கள் நிச்சயாமாக தட்டி கேட்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.ஊர் விசயத்தில் நீடூரான் என்று ஒற்றுமையுடன், போராடுவோம் தேவையில்லாமல் தவூகீத், சுன்னத்துல் ஜமாது, தமுமுக என பிரிக்காதீர்கள், அதே போல் நம்முடைய கொள்கையில் யார் மீதும் திணிக்காதீர்கள், அப்படி தினிக்கும்
பட்சத்தில் நமக்கு விருப்பம் இல்லாததை விட்டு நாம் தான் விலகி கொள்ள் வேண்டும், அதை விட்டு விட்டு அதில் சென்று அவர்களை கேவலப்படுத்துகிறேன் என்று நம்மை கேவலப்படுத்திக்கூடாது. வல்ல ரஹ்மான் நம் எல்லோரையும் பாதுக்காக்க்ட்டும், நல்ல நிர்வாகியை நமக்கு தரட்டும் ஆமீன்