அல்லாஹ்வின் உதவியால் நமதூரில் ரகசிய வாக்கெடுப்பு சுமூகமான முறையில் நடைபெற்றது!! இந்த ரகசிய வாக்கெடுப்பிற்கு அயராது முயற்சி செய்த MAP.தாஜ் அவர்களுக்கும், முஹம்மத் அலி அவர்களுக்கும், அவர்களுக்கு பக்கபலமாக அரும்பாடு பட்ட நமதூர் இளைஞர்களுக்கும், ஒத்துழைப்பு தந்த ஜமாத்தார்களுக்கும், ஊர் பெரியவர்களுக்கும், சமாதானத்திற்கு முயற்சிசெய்த வட்டார ஜமாத்தினருக்கும், வட்டாசியருக்கும், சென்னை வக்பு போர்டிற்கும், சிறப்பான முறையில் ரகசிய வாக்கெடுப்பை நடத்தி தந்த வக்பு போர்டு ஆய்வாளர் முஹம்மத் அவர்களுக்கும், அலுவலர் களுக்கும், சிறப்பான முறையில் பாதுகாப்பை ஏற்படுத்தித்தந்த மாவட்ட துணை கண்காணிப்பாளர், ஆய்வாளர், துணை ஆய்வாளர் மற்றும் காவலர்கள் அனைவருக்கும், ஆர்வமுடன் வாக்களித்த ஜமாத்தினருக்கும், ஒத்துழைப்பு தந்த ஊடகங்களான கிளியனூர் நெட், நீடூர் நெட் , நீடூர் நெய்வாசல் ப்ளாக் ஸ்பாட், நீடூர் ஆன்லைன், நீடூரி ப்ளாக் ஸ்பாட், நீடூர் இன்போ மற்றும் வாக்கெடுப்பு சுமூகமாக நடைபெற துவா செய்த உலகெங்கும் வாழும் நமது ஜமாத்தை சார்ந்த அனைவர்களுக்கும் மைநீடூர் இணையதளம் மனம் கனிந்த நன்றியை தெரிவித்துகொள்கிறது! அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லுதவி புரிவானாக! இன்ஷா அல்லாஹ் அமையவிருக்கும் புதிய நிர்வாகம் நம் நீடுரை மற்ற ஊர்களுக்கு முன்மாதிரி ஊராக மாற்றும் நிர்வாகமாக அமைய எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிராத்திப்போமாக!!!
No comments:
Post a Comment