தேர்தல் விதிமுறைகளை
தொடர்ந்து மீறிக்கொண்டிருக்கும் முன்னாள் நிர்வாகிகள்
நமது ஊர்
நிர்வாகத்திற்கு தேர்தல் நடத்த வக்ஃப் வாரியம் முடிவுசெய்து சென்றவாரம் அதற்கான அறிவிப்புகளை
செய்தார்கள் தேர்தலுக்கு வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்த உடனேயே தேர்தல்
விதிமுறைகள் அமலுக்கு வந்து விடுகிறது இது அனைவரும் அறிந்த ஒன்று.
ஆனால் தேர்தல்
அறிவித்த பிறகும் பள்ளிவாசலில் வைத்து தங்கள் ஆதரவாளர்கள் கூட்டத்தை
நடத்துகிறார்கள்,(இது ஜமாத்தார்கள்
கூட்டம் ஆகாது) பதவியில் இருப்பது போல் அறிக்கை விடுகிறார்கள், ஜாமிஆ மஸ்ஜித் என்று பள்ளிவாசல் பெயரைபோட்டு
நோட்டீஸ் அடித்து
இருக்கிறார்கள் தேர்தல் நேரத்தில் பள்ளிவாசலையோ, நிர்வாகத்தின் பெயரையோ இந்த முன்னால்
நிர்வாகிகள் பயன்படுத்துவதற்கு என்ன அதிகாரம் இருக்கிறது.? எல்லாம் போக இப்போது தாங்கள் தேர்வு செய்து
அறிவித்த வேட்பாளர்களை நமது ஜமாத்தார்கள் மூலம் தேர்வு செய்து
அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் என்று
எழுதியிருக்கிறார்கள் இது முற்றிலும் தவறான
கருத்தாகும். அரசியலில் வித்தை கத்த இவர்களுக்கு ஏனோ இது தெரியவில்லை இதை
அறியாமை என்பதா? ஆணவம் என்பதா?
அப்படியானால்
அவர்களுக்கு போட்டியாக களத்தில் உள்ளவர்கள் ஏனாதிமங்களத்தில் உள்ளவர்கள் தேர்வு
செய்தார்களா? அல்லது கடுவங்குடியில்
உள்ளவர்கள் தேர்வு செய்து அறிவித்தார்களா? இதை அவர்கள் விளக்க வேண்டும். ரகசிய
வாக்கெடுப்புக்கும், தேர்தலுக்கும்
பாடுபட்ட தாஜ், முஹம்மது அலி மற்றும்
இவர்களை சார்ந்தவர்கள்தான் ஊர் மக்களால் தேர்வு
செய்யப்பட்டவர்கள். இவர்களே ஊர் மக்களின் ஆதரவைப்பெற்றவர்கள்
இவர்கள் தான் முதலில்
தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்கள்,மேலும் தாங்கள் ஊர் பதவிக்கு வந்தால் என்ன
செய்வோம் என்பதையும் மக்களுக்கு தெளிவு படுத்தியிருக்கிறார்கள்.
ஊர் முன்னால்
நிர்வாகிகளின் ஆதரவில் போட்டியிடும் வேட்பாளர்கள் எதையும் இதுவரை முன்வந்து செய்ய
வில்லை இவர்களுக்கு ஓட்டு கேட்பதும் அறிக்கை விடுவதும் முன்னால் நிர்வாகிகள்தான்
செய்கிறார்கள். இப்போதே இப்படி என்றால் இவர்கள் நிர்வாகத்திற்கு வந்தால் யார் நிர்வாகம் செய்வார்கள்? இதை மக்கள் புரிந்தால்
சரி. மேலும் அதில் சிலர் இன்னும்
தேர்தலை நிறுத்த என்ன
செய்யலாம் என்பதில் மும்முரமாக இருப்பதால் அதற்கான நடவடிக்கையை செய்து
கொண்டிருக்கிறார்கள் என்றும் செய்தி வருகிறது. தேர்தலை சந்திக்க இவர்களுக்கு ஆற்றல் இல்லாததையே
இது காட்டுகிறது.
உண்மையில் முன்னால்
நிர்வாகிகளின் ஆதரவு வேட்பாளர்கள் தங்கள் சுயவிருப்பத்தில நின்றால் அவர்கள் களம்
இறங்கி ஓட்டு கேட்கவேண்டும் தாங்கள் பதவிக்கு வந்தால் என்ன நன்மை செய்வோம், என்ன திட்டம் கொண்டுவருவோம் என்பதை
வேட்பாளர்கள் தங்கள் சொந்த கருத்தை
தெளிவுபடுத்த வேண்டும். ஆனால் அது அங்கு நடக்கவேயில்லை என்பதை
நமது வாசகர்களும் ஊர்
ஜமாத்தார்ளும் புரிந்துக்கொள்ள வேண்டும். சுயமாக செயல்படாத இந்த வேட்பாளர்கள்
நாளை பதவிக்கு வந்தால் எப்படி நிர்வாகம் செய்வார்கள், திட்டம் தீட்டுவார்கள், செயல்படுவார்கள். இவர்கள் எதையும் செய்ய
நினைத்தால் அண்ணன்களை கேட்காமல் செய்ய
முடியாது என்பதையே இது உணர்த்துகிறது. இதை நமது ஊர் மக்கள் புரிந்து யார் பதவிக்கு வரவேண்டும் யார் வரக்கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். மேலும் வருகிற ஊர்
நிர்வாக தேர்தலில் ஊர் ஜமாத்தார்களின் ஒட்டு மொத்த ஆதரவை பெற்று போட்டியிடும் சகோ.
எம்.ஏ.பி.தாஜ், சகோ.முஹம்மது அலி
மற்றும் இவர்களை சார்ந்த சகோதரர்களுக்கு
வாக்களிக்குமாறும் இவர்கள் மட்டுமே ஊரில் சிறந்;த மாற்றத்தை கொண்டுவர முடியும்
என்பதை ஜமாத்தார்களுக்கு அன்புடன் நினைவுபடுத்திக்கொள்கிறோம். அனைத்தையும் அல்லாஹ்
நன்கு அறிந்தவன்.
நன்றி: www.niduri.blogspot.com
No comments:
Post a Comment