அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Sunday, June 3, 2012

ஒரு மனம் திறந்த மடல்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

வருகிற ஜுன் 16ம்  தேதி ஜமாஅத் நிர்வாக தேர்தலுக்காக நமதூரில் அதற்கான பணிகள் மிகவும் பரப்பரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தேர்தலுக்கு எதிராகவும், பழைய நிர்வாகிகளுக்கு ஆதரவாகவும் சிலர் களம் இறங்கியிருக்கிறார்கள். எலெக்ஷனா? செலக்ஷனா? என்ற நேரத்தில் செலக்ஷன்தான் எலெக்ஷன் கூடாது இது மார்க்க முறையில்லை என்றெல்லாம் சொல்லப்பட்டு பிறகு தடை ஆணை பெற முயன்று எல்லாம் தோற்றுபோக எலெக்ஷன்தான் வேறு வழியில்லை என்று வந்தவுடன்  பழைய நிர்வாகிகள் ஊர் கூட்டத்தை கூட்டி கூட்டத்துக்கு வராதவர்களை எல்லாம் வேட்பாளர்களாக  தங்கள் சார்பாக அறிவித்து இருக்கிறார்கள். அதில் உடன்பாடு இல்லாத சிலர் போட்டியிட மறுத்து விலகி கொண்டனர்.இந்த நிலையில் கூட்டத்துக்கு வராமல் இருந்த வேறு இருவர்களையும்; வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதை பற்றி வரக்கூடிய செய்திகளை வைத்து இந்த இருவருக்கும் எழுதும் மனம் திறந்த மடல்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

இம்மடல் தங்களை பூரண உடல் நலத்துடனும் உரிய இஸ்லாமிய உணர்வுடனும் சந்திக்க இறைவனை பிறார்த்திக்கிறோம்.

தாங்கள் இருவரும் தேர்தலில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருப்பதை கண்டு மகிழ்சியுற்ற அதே சமயம் இதன் பின்னனியை அறிந்து கவலையும் அடைந்துள்ளோம். நீடூர் நெய்வாசல் பல ஊருக்கு முன்னுதாரணமாக முன்பு இருந்து வந்தது ஆனால் தற்போது ஒரு சில நபர்களின் தவறான வழிகாட்டுதலால், தவறான நடைமுறைகளால் நிர்வாகம் சீர்கெட்டு போயிருப்பதை, பிற ஊர் மக்கள் பேசுவதை நாம் கேட்க முடிகிறது. இவை தாங்களும் அறிந்திருப்பீர்கள்.

சில நாட்களுக்கு முன்பு ஒரு ஆதிக்க சக்தி சிலரை சந்தித்தபோது எம்.ஏ.பி.சுக்கூர் காலத்திலிருந்து நாங்கள்தான் நிர்வாகிகளை நியமனம் செய்கிறோம் அப்படியிருக்க இவனுங்க யார்? புதிதாக தேர்தல் நடத்த என்று சொல்லியிருக்கிறார்.

இந்த வார்த்தை ஊர் மக்களை கலக்கம் அடைய செய்துள்ளது நமதூர் ஜமாத்தார்களுக்கு சுய அறிவு இல்லையா? யார் நல்லவர் யார் கெட்டவர் என்று முடியு செய்யும் ஆற்றல் இல்லையா? அல்லாஹ்வின் உதவியால் சிறந்த சிந்தனை உள்ள மக்கள் நமது ஊர் ஜமாத்தார்கள். அப்படியிருக்க இவர்கள் யார் நியமனம் செய்ய? இது இவர்களின் தகப்பன் சொத்தா? யார் நிர்வாகிகள் என்பதை ஜமாத்தார்கள்தான் முடிவு செய்யவேண்டும்.

தாங்கள் இருவரும் கண்ணியமான குடும்பத்தை சேர்ந்தவர்கள் பல நிர்வாகத்தில் இருந்தவர்கள் ஆனால் உங்களுக்கு இருக்கும் இந்த நற்பெயரை பயன்படுத்தி மக்கள் முன்பு உங்களை முன்னிலைப்படுத்தி தங்கள் காரியங்களை சாதிக்க சிலர் துடிக்கிறார்கள். இதை மக்கள் விரும்பவில்லை.நீங்கள் இருவரும் தனியாக சுயேட்சையாக களம் இறங்கினால் மக்கள் உங்களுக்கு வாக்களிக்க தயாராகவே இருக்கிறார்கள். ஆனால்; நாங்கள் நியமனம் செய்பவர்கள்தான் பதவிக்கு வரமுடியும் என்று ஆதிக்க சக்திகள் கூறிவருவதால் அவர்களின் பினாமி என்றே மக்;கள் உங்களை பார்க்க துவங்கிவிட்டார்கள்.

அப்படியானால் அமெரிக்காவால் நியமனம் செய்யப்பட்டு இருக்கும் ஹமீதுகர்சாய் அமெரிக்காவின் கைகூலி என்றால், அது தவறு என்றால், ஆதிக்க சக்தியால் நியமனம் செய்யப்பட்டு இருக்கும் இன்றைய வேட்பாளர்களும் அப்படிதானே?அந்த நிலை உங்கள் பெயருக்கு வரக்கூடாது என்றுதான் சொல்கிறோம்.


நமது ஊரின் மீது உங்களுக்கு அக்கரை இருக்குமாயின் கவலை இருக்குமாயின் நீங்கள் தெளிவான சிந்தனையுடன், சுய விருப்பத்துடன் தனியாக போட்டியிட வேண்டும். இது உங்கள் மீது கடமையும் கூட. அதை மக்கள் ஆதரிக்கிறார்கள் அதை மக்கள் வரவேற்கிறார்கள் அப்போது உங்களுக்கு மக்கள் ஓட்டுப்போட தயார். ஆனால் இவர்கள் பரிந்துரையில் நீங்கள் இருவரும் வருவது நல்ல  முன்னுதாரணமாக இல்லை. காரணம் கண்ணியமான குடும்பத்தை சேர்ந்த நீங்கள் தவறான வழிகாட்டுதலில் இருப்பதாக பேசப்படுகிறது.மேலும் இவர்களின் பரிந்துரையில் நீங்கள் பதவிக்கு வந்தால் இதற்கு முன்னால் நடந்த அனைத்து தவறுகளுக்கும், ஊழல்களுக்கும் நீங்கள் பதில் சொல்லவேண்டும்.

பெயர் பெற்ற நமது ஊர் இன்னும் எந்த செயல் திட்டமும் தீட்டப்படாமல் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.  பழைய நிர்வாகிகள் தங்களைத்தான் வளப்படுத்திக்கொண்டார்கள். ஊரின் நலனில் அக்கரை செலுத்தவில்லை என்பது ஊர் அறிந்த உண்மை.

இதை தாங்கள் மறுபரிசீலனை செய்யவேண்டும். சரியான மனிதர்கள் தவறான இடத்தில் என்று ஆகிவிடக்கூடாது. இப்படி சொல்வதற்கான காரணம் பல உள்ளன. அவைகளை பட்டியல் இட இது உகந்த இடமல்ல. ஆனால் கடந்தகால நீடூர்நெய்வாசலின் நிகழ்வுகள், மதரஸாவின் வளர்ச்சி இதற்கு சான்று.

நமதூரில் நிர்வாகமே இல்லாமல் சிலரின் அடக்கு முறைகளுக்கு ஆளாகி நாங்கள் நிர்னயிப்பவர்கள்தான் நிர்வாகிகள் என்ற நிலை வந்துவிட்டது. இது நமதூர் நிர்வாக சீர்கேட்டிற்கு சிறந்த உதாரணம். இதில் மாற்றம் கொண்டுவர இதை மாற்றி அமைக்க நீங்கள் விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என்று ஊர் மக்களாகிய நாங்கள் விரும்புகிறோம்.



1 comment:

  1. DEAR NOWSATH ATHU YENNA MADAL APPADI ITHU YENNA FRENCH ALLATHU SPIN LANGUAGE YENDRU NENAIKKIREN

    ReplyDelete