அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Monday, May 28, 2012

ஏன் இந்த தடுமாற்றம்?

நீடுர் - நெய்வாசல் ஜமாத் நிர்வாகத் தேர்தலுக்கு முதலில் ரகசிய வாக்கெடுப்பை வழியுறுத்துவோர் 12 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டனர். அதன் பின்பு ரகசிய தேர்தலுக்கு எதிர்ப்போர், பழைய நிர்வாகிகளின் நிலைப்பாட்டை ஆதரிப்போர் 26-05-2012 அன்று 12 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டிருந்தனர். அதன் பின் அப்பட்டியலில் உள்ள சிலர் போட்டியிட மறுத்து விலகி கொண்டனர். இதனிடையே இடைகால நிர்வாகி ஒருவர் தன் சகாக்களோடு ரைஸ்மில் தெரு சகோதரர் அக்பர் அலி அவர்களிடமும், ஜின்னா தெரு சகோதரர் நசுருல்லாஹ் அவர்களிடமும் சென்று தங்கள் அணியின் சார்பாக போட்டியிடுமாறு கூறியுள்ளனர். அதற்கு அந்த சகோதரர்கள் சம்மதிக்கவில்லை, தங்கள் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்றும் கூறிவிட்டனர். இவர்கள் 12 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்ட பிறகு எதிர்தரப்பு வேட்பாளர்களை சந்தித்து தங்கள் அணியின் சார்பாக போட்டியிட அழைப்பதன் அவசியம் என்ன? தாங்கள் முன்னிறுத்திய வேட்பாளர்கள் மேல் நம்பிக்கை இல்லையா? இல்லை அவர்கள் அணிதான் ஜமாத் சார்பாக போட்டியிடுவதாகவும், எதிர்தரப்பினர் ஜமாத்திற்கு எதிராக போட்டியிடுவதாகவும் போன்ற தோற்றத்தை ஏற்படுத்த இந்த வேலையா? ஜமாத்தாருக்கு தெரியும், இந்த இரு அணியினரும் நம் ஜமாத்தை சார்ந்தவர்களே! ஆனால் நிலைப்பாட்டில் தான் இரு அணியினரும் வேறுபடுகின்றனர். எந்த நிலைப்பாடு நம் ஊருக்கு நல்லது எனவும் ஜமாத்தாருக்கு தெரியும். ஊழலையும், அநியாயத்தையும் எதிர்போர் ஒர் அணியாகவும், பழைய நிர்வாகிகளை காக்கவும், இப்பொழுது உள்ள குழப்பமான சூழ்நிலை தொடர விரும்புவோர் இன்னோரு அணியாகவும் போட்டியிடுகின்றனர். ஜமாத்தாரும் இந்த இரு வேறுபட்ட நிலைபாடுகளை கொண்ட இரு அணிகளில் யார் வந்தால் நல்ல நிர்வாகத்தை கொடுக்க முடியும் என்று நினைக்கிறார்களோ அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். எதிர் தரப்பினரை தம் அணிக்கு இலுக்க நினைக்கும் இவர்களின் போக்கு சரியா என்பதையும் ஜமாத்தார்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் இன்ஷா அல்லாஹ்.அல்லாஹ்வும் நம் முயற்சிக்கு நல்லருள் தந்திடுவானாக! ஆமீன்.

ரகசிய வாக்கெடுப்புக்கு அதரவு தெரிவித்த இறுதி வாக்களர் பட்டியல்:


1.முஹம்மது ஆரிபின்
த.பெ:சுலைமான்
புதுமனைத்தெரு 


2.அப்துல் ரஹ்மான்
த.பெ:ஷேக்தாவூத்
சபியாத்தெரு 



3.அக்பர்அலி
த.பெ:சேக் தாவூத்
ரைஸ்மில்தெரு 

4.நசுருல்லாஹ்
த.பெ:அப்துல்ஹமீது
ஜின்னாத்தெரு 


5.அப்துல்மஜிது
த.பெ:சுலைமான்
மேலத்தெரு 


6.முஹம்மது அமீன்
த.பெ:முனீருல் ஹுதா
J.M.H.மெயின் ரோடு 

7.தாஜ்தீன்
த.பெ:அப்துல் ஷக்கூர்
ரயிலடித்தெரு 


8.முஹம்மது அலி
த.பெ:அப்துல் வஹாப்
ஜின்னாத்தெரு 


9.தாஜுதீன்
த.பெ:முஹம்மது யூசுப்
அஜிஸ்நகர்



10.நஜிமுதீன்
த.பெ:அப்துல்ஜலீல்
ஜின்னாத்தெரு



11.முஹம்மது அலி
த.பெ:முஹம்மது முஸா
மேலத்தெரு 

12.காதர்ஷரீப்
த.பெ:முஹம்மது சயீது
ஜின்னாத் தெரு 

மாறுதலுக்கு உள்ளான ரகசிய வாக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களின்
இறுதி வாக்களர் பட்டியல்:

1.அப்துல்ரவூப்

த.பெ: அப்துல் ஹமீது
ஜின்னாத்தெரு

2.தமிமுன்அன்சாரி

த.பெ: ஹியாத்துல்லாஹ்
சேக்தாவூத்தெரு

3.சதகத்துல்லாஹ்

த.பெ: காதர்பாட்சா
ரைஸ்மில்தெரு

4.முஹம்மது சபீர்

த.பெ: முஹம்மது சாலி
பள்ளிவாசல்தெரு

5.அப்துல் மாலிக்

த.பெ: அப்துல் கரிம்
மிட்லெண்ட் தெரு 


6.முஹம்மது நஜிம்

த.பெ: ஷேக்தாவூத்
ரயிலடித்தெரு 


7.முஹம்மது ரபீக்

த.பெ: கமாலுதீன்
பரகத்காலணி

8.அப்துல் ஹண்ணான்

த.பெ: பக்கீர்முஹம்மது
அஜிஸ்நகர்

9.நஜீர்அஹமது

த.பெ: ஷபியுதீன்
ஹாஜித்தெரு

10.ஜெஹபர்அலி

த.பெ: ஷரீப்
ஜின்னாத்தெரு

11.லியாகத்அலி

த.பெ: அய்யூப்
J.M.H.மெயின் ரோடு

12.பஜுல்ரஹ்மான்

த.பெ: ஒலிமுஹம்மது
சபியாத்தெரு 


13.சபீர்அஹமத்

த.பெ: சேக்தாவூத்
கீழத்தெரு

14.முஹம்மது மஜிது

த.பெ: அப்துல்சுக்கூர்
சலவாத்துபாவா காலணி 



வேட்பாளர்களின் வேட்பு மனு தாக்கலின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்:
















3 comments:

  1. அ.ஹ.நஜீர் அகமதுMay 29, 2012 at 8:47 AM

    அல்லாஹ் நினைத்ததை நிறைவேற்றியே தீருவான் புலம்பியவர்கள், புலம்புபவர்கள் குழப்பத்தை விளைவித்தவர்கள் மக்களை குழப்பி
    கொண்டிருப்பவர்கள் அவரவர் பணியை அவரவர் செய்து கொண்டே இருக்கட்டும் நான் நினைத்த காரியத்தில் மக்களை நேர்வழி இழுத்து செல்கிறேன் தயக்கம் இல்லாமல் வாருங்கள் இல்லையேல்
    இப்லிஸ் தவறான பாதையில் இழுத்து சென்று விடுவான் என்பதை அல்லா உறுதி
    செய்து கொண்டே இருக்கிறான்.

    ReplyDelete
  2. தற்போது ஒன்றும் முடியாமல் போகவே வேட்பாளர்களை நமது சந்தித்து மிரட்டி வருகிறார்கள் நமது வேட்பாளர்களுக்கு எதிராக அசிங்கமாக விமர்சனம் செய்து மொட்மை போஸ்டர் ஒட்டி வருகிறார்கள். ஆனால் இவர்கள் செய்த கொள்ளைகளை நாம எழுதினால் அவர்களால் அதை தாங்க முடியுமா? ஏன் இந்த இழி செயல்? தேர்தல் நடக்குமா? நடக்க விடுவோமா? என்றவர்கள் ஏன் வேட்பாளர்களை நிருத்தினார்கள்? இது அறிவுள்ளவன் செயலா? கூடாது என்றவர்கள் அதை தடுக்கதான் போகவேண்டுமே தவிர அதைவிட்டு வேட்பாளர்களை மிரட்டி கேவலப்பட்டு நிற்கும் செயலில் இறங்கிவருகிறார்கள். பஞ்சாயத்து தலைவராக இருந்தபோது இந்த டிரஸ்டி லஞ்சம் கேட்டு மக்களை துண்புறுத்தவில்லையா? வீட்டு மனை அனுமதிக்கு யாரும் வந்தால் (தனக்கு இரண்டு குடும்பம் உள்ளது வீடு இல்லை என்று சொல்லாமல்) ஒரு மனை கொடு என்று இவர் வாங்கவில்லையா? இன்னும் சிலர் இவர் நிர்வாகத்தில் பள்ளிவாசல் கட்டுவதில் கொள்ளையடிக்கவில்லையா? அதன் திறப்புவிழா என்று சொல்லி சாப்பிட வில்லையா? தாங்கள் நின்றால் ஆள் அடையாளம் தெரியாமல் போய்விடுவோம் என்பதால் இவர்கள் வேறு சிலரை நிருத்தியிருக்கிறார்கள். ஆனால் இவர்கள் மூலமாக நிருத்தப்படும் யாரும் இவர்களை கலக்காமல் எதுவும செய்ய முடியாது. இவர்கள் பசும்தோல் போர்த்திய புலிகள் தங்கள் கட்டளைக்கு தலையாடும் பொம்மைகளைத்தான் இவர்கள் ஆதரிப்பார்கள். அன்ஸாரி அவர்களும் மாலிக் அவர்களும் சுயமாக எதுவும் செய்ய முடியாத, செய்யத்தெரியாத பொம்மைகளே காரணம் இவர்களை நாம் மதரஸா நிர்வாகத்தில் பார்த்திருக்கிறோம். இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது இரண்டு தாதாக்கலையும கேட்காமல். இதை மக்கள் தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார்கள்.

    ReplyDelete
  3. முஸ்லிம் மக்களே உஷார்!!! சமீப காலமாக மக்கள் கணக்கெடுப்பு என்ற பெயரில் (கணக்கெடுப்பு சில மாதத்திற்கு முன்பு முடிந்து விட்டதாக அறிகிறோம்) வீட்டில் எத்தனைபோர். நீடூரில் சென்றவாரம் சில பெண்கள் வந்து வெளிநாட்டில் எத்தனை பேர் என்று கேட்டு எழுதி உள்ளனர் கவணமாக இருக்கவும். கடயநல்லூரில் இப்படி வந்தவர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்து உள்ளனர்.

    ReplyDelete