அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Friday, November 4, 2011

சுயமரியாதை கொண்ட நிர்வாகம் வேண்டும்!!!!

இன்று(04/11/2011) நடந்து முடிந்த ஜும்மா தொழுகைக்கு பின் நமதூர் முத்தவல்லி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் நீடூரில் கோரஸ் வாக்கெடுப்பு என்பது பாரம்பரியமிக்கது, அதை மாற்றி ரகசிய வாக்கெடுப்பெல்லாம் நடத்த முடியாது என்றுள்ளார். இது போல் இவரால் தன்னிச்சையாக முடிவெடுத்து சொல்ல அதிகாரம் தந்தது யார்? எதாவது பிரச்சனை என்றால் மக்களின் பெருபான்மையை பார்த்தே முடிவெடுக்க வேண்டும். மக்களுக்கு பணியாற்றவே இவர்களை நாம் ஒரு பிரதிநிதிகளாக தேர்தெடுத்துள்ளோமே தவிர இவர்கள் தான் நீடூரின் மொத்த உருவம் என அவர்களே நினைத்து கொள்ளக் கூடாது. நீடூர்-நெய்வாசல் நிர்வாகிகள் தேர்தலை ரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்த வலியுறுத்தி தஞ்சை வக்பு வாரிய தலைவருக்கு எத்தனை SMS-கள் மக்கள் அனுப்பியிருக்கிறார்கள் என்று இந்த நிர்வாகிகளுக்கு தெரியுமா?. மக்கள் இந்த நிர்வாகத்திடம் எதை சொன்னாலும் செவிடன் காதில் ஊதிய சங்கை போல் எதுவும் நடக்காது என தெரிந்தே தேர்தலை நடத்தும் வக்பு வாரியத்திடம் SMS மூலமாக தங்கள் கோரிக்கைகளை தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மக்களுக்கு இந்த நிர்வாகத்திடம் உள்ள
அதிருப்தியை வெளிபடுத்தியுள்ளனர்.
கோரஸ் முறை என்றால் வெளிப்படையாக மக்கள் இந்த பெரியவர்கள் என்று சொல்லி கொள்பவர்களை எதிர்த்து கைத்தூக்க பயப்படுவார்கள். அதற்காக தானே ரகசிய வாக்கெடுப்பு மூலமாவது நம் மக்கள் தங்களது வீரத்தை வெளிபடுத்துவார்கள் என்று தானே இந்த முறையை அனைவரும் வலியுறுத்துகின்றனர். மூன்றாண்டிற்கு முன் கையொப்பம் இட்டு தேர்தல் நடத்தினார்களே அப்போழுது இவர்கள் பாரம்பரியம் எங்கே போனது? அந்த தேர்தலில் கிடைத்த தோல்வியின் காரணமாகவே இவர்கள் ரகசிய வாக்கெடுப்பு நடத்த பயப்படுகின்றனர். மக்கள் இவர்களை எதிர்ப்பது இவர்களுக்கே தெரிந்தும் ஏன் தான் இந்த பதவியில் ஒட்டிக் கொண்டு பதவி விலக மறுக்கிறார்களோ? இவர்களை மக்கள் எப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்று இவர்களுக்கு தெரியுமா? தெரிந்து தான் இந்த பதவியில் இருக்கின்றேன் என்று இவர்கள் கூறுவார்களானால் இவர்களை நாம் என்ன செய்வது? சுயமரியாதை எவ்வளவு முக்கியம் என்று இஸ்லாம் கூறுவதை இவர்கள் ஏற்கவில்லையா? இவ்வளவு கேள்விகளும் மக்களின் கேள்விகள்? அவர்களின் ஆதங்கத்தின் வெளிபாடுகள். மக்களும் இந்த கோரஸ் முறைக்கு ஒருபோதும் ஒத்துக்கொள்ளக்கூடாது. அதற்கு மாறாக இந்த கோரஸ் முறைக்கு ஒத்துக்கொண்டால் இவர்களை தவிர வேறு யாரும் பதவிக்கு வர முடியாது. திரும்ப இவர்கள் வந்தபின் அது சரியில்லை, இது சரியில்லை என மக்கள் புலம்பாமல் அதற்கு முன்பே தடுத்து நிறுத்துவது எல்லாருக்கும் நல்லது. இன்ஷா அல்லாஹ் நம் மேல் அக்கறை கொண்ட, ஊர் நலனை மேல்படுத்த திறமை கொண்ட, எதற்கெடுத்தாலும் வசூல் என்று குடும்பத்தை பிரிந்து குறைந்த ஊதியத்தில் வெளிநாடுகளில் சம்பாதிப்பவர்களிடம் கட்டாய வசூல் செய்யாமல் ஊரிலேயே ஜமாத்திற்கு தேவையான வருமானத்தை உண்டாக்கிக் கொள்ள திறமை படைத்த ஜமாத் வருவதற்கு எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போமாக.

6 comments:

  1. really shameless people.what kind of people we don't know. jamath people will through oneday.

    ReplyDelete
  2. பாபு என்ற சகோதரர் நமது மின்னஞ்சலுக்கு அனுப்பிய கருத்தை இங்கே வெளியிடுகிறோம்.

    ----- Forwarded Message -----
    From: Nidur Babu
    To: paroshan1974@yahoo.com
    Sent: Friday, November 4, 2011 9:35 PM
    Subject: [இஸ்லாம் உறவுகள்] ( நீடூர்) நெய்வாசல் நாட்டாமை தேர்தல் கோரிக்கை..

    நீடூர்- நெய்வாசல் ஜமாத்தார்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    அல்லாஹ்வின் நாட்டத்தால் நாட்டாமை தேர்ந்தெடுக்கும் புதிய தலைமை..
    எப்படி தேர்ந்தெடுக்கவேண்டும் இதுவரை எப்படி தேர்ந்தெடுத்தார்கள்..
    இனி மேலும் குரல் வாக்கெடுப்பில் தேர்ந்தெடுத்தால் நிச்சயமாக..
    நேர்மையாக ஜனநாயக முறைப்படி இருக்காது ஆகவே...
    ஓட்டெடுப்பு மூலமே தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்திட வேண்டும்...
    அப்போதுதான் தனிமனித உரிமையை நிலை நாட்டுவதாக இருக்கும்...
    எந்த ஒரு தனிமனித ஆதிக்கமும் நமதூரில்இனிமேல் இருக்க கூடாது..
    ஊர் கட்டுப்பாடு என்பது -அடுக்கு முறையில் இருக்க கூடாது..
    அதிகார பகிர்வு மூலமே தீர்வு காணமுடியும் இதற்கு ஓட்டெடுப்பு தேர்வே...
    அனைவரையும் ஒன்றுபடுத்தி ஒற்றுமை நிலைத்து தழைத்து விளங்கும்....
    ஓட்டெடுப்பில் எந்த தில்லு முல்லும் நடைபெறாமல் நேர்மையாய் நடக்க..
    அல்லாஹ்வை சாட்சியாய் வைத்து நடைபெறவேண்டும்...
    யார் ? தெர்ந்தெடுக்கப்பட்டாலும் அவர்களுக்கு ஒரு கோரிக்கை...
    ஊர் வரவு செலவு மதரஸா வரவு செலவு வெளிபடையாக இருக்கவேண்டும்.
    அதற்கு கணினியில் பதிவிட்டு இணையதளத்தில் வெளியிடவேண்டும்...
    அப்போதுதான் பதவி நம் மீது கரைபடிந்த பழியை சுமத்தாது..
    பொதுவாழ்வில் தூய்மையானவர்களாக இருந்தால் பதவி சுமையா...
    இருக்காது எனவே ஓட்டெடுப்பு மூலம் தேர்ந்தெடுப்போம்..
    அமைதியும் ஒற்றுமையும் நாமாக இருந்து அடுத்த ஊருக்கு..
    எடுத்துகாட்டாக வரலாராய் இருப்போம் இன்ஷா -அல்லாஹ்....!

    வஸ்ஸலாம்..
    நீடூர் நெய்வாசல் அ பாபு....

    ReplyDelete
  3. they should be good example and guide for our Parambariyamikka Nidur jamath and young generation, but present management we cannot expect from them, everyone knows what is going on our place. Nidur jamath People should not allow present management to participate the coming election( they are undeserved ) no one cannot escape from " ALLAH ".


    Nidur Nalam virumbi

    ReplyDelete
  4. மதிப்பிற்குறிய ஜமாத்தார்களுக்கு

    சமீப காலமாக நம் பாரம்பரியமிக்க நம் ஊரின் நிலை எல்லேர்ரும் அறிந்ததே. எவ்வளவு பேச்சுக்கள், எவ்வளவு விமர்சனந்கள். ஏன் இந்த நிலை. முதலில் தற்பொழுது உள்ள நிர்வாகம் ஜமாத்தை கூட்டாமல் அவர்களுக்குள் எடுக்கும் முடிவை நிறுத்த வேண்டும்.அவர்களுக்குள் முடிவு செய்து பின்னர் ஜமாத்துக்கு அறிவிப்பது, இப்படி ஒரு அதிகாரத்தை இந்த மைனாரிட்டி நிற்வாகத்திற்கு யார் கொடுத்தது.யார் நிர்வாகத்திற்கு வந்தாலும் ஊர் ஜமாத்தை கலந்தாசிக்காமல் எந்த முடிவும் எடுக்க கூடாது என்ற சட்டத்தையும், அரசியலில் உள்ளவர்கள் ஊர் நிர்வகாத்தில் பதவி வகிக்க கூடாது என்ற சட்டத்தையும் உருவாக்க வேண்டும்.ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கும் முறையைத்தான் கையாள வேண்டும். யார் நிர்வாகத்திற்கு வந்தாலும் பரவாயில்லை, ஊருக்காகவும், ஜமாத்தினரின் நலனுக்காகவும், உண்மையாகவும், நேர்மையாகவும், எல்லாவற்றிற்கும் மேலாக " அல்லாஹ் " விற்கு அஞ்சி நடப்பவர்களாக இருக்க வேண்டும். ' அல்லஹ் " தான் நன்மையை நாட வேண்டும்.

    Mohamed - Nidur

    ReplyDelete
  5. ஊரின் பெரியவர்களும், நல்லவர்களும் ஒதுங்கி இருப்பதால்தான் இப்பொழுது உள்ள நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு வசதியாக போய் விட்டது. நிர்வாகத்தில் உள்ளவர்கள் நீதியுடனும், நேர்மையுடனும், இறை அச்சத்துடனும் உள்ளவர்களாக இருந்து நமக்கும், நம் இளைய சமுதாத்திற்கு நல்ல வழிக்காட்டியாகவும் இருக்க வேண்டும். ஆனால் இப்பொழுது உள்ளவர்களால் அப்படி ஒரு சூழ்நிலையை யாரும் எதிர்பார்க்க முடியாது. இவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும், ஊரின் வளர்ச்சிக்கும், அமைதிக்கும் கேடு விளைவிக்கும் விதமாகமாகவே உள்ளது. கடந்த 11 ஆண்டுகளை அசை போட்டு பாருந்கள். ஏன், எல்லாம் அவர்களுக்குள் எடுக்கும் முடிவு, அதிகாரம், மிரட்டல் இன்னும் எத்தனையோ. இனி இப்படி ஒரு நிர்வாகம் நம் பாரம்பரியமிக்க பெருமைக்குரிய நீடூரில் வராமல் "அல்லாஹ்" தான் காப்பற்ற வேண்டும்.
    ஊர் நலம் விரும்பி

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அலைக்கும்

    ஊர் நிர்வாகத்திற்க்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பது தொடர்பாக பரவலாக பேசப்படும் நிலையில் அதற்கான எந்த அறிகுறியும் தெறியவில்லை. அதற்கான எந்த அறிவிப்பையும் நிர்வாகம் அறிவித்ததாக தெரியவில்லை. ஊரில் பரவலாக கேட்கும் விமர்சனங்களும், நமதூர் சம்பந்தப்பட்ட ஆன் லைன்களில் வரும் கருத்துக்களையும் பார்க்கும்போது 99% எலெக்சன் முறையைத்தான் ஆதரிக்கிறார்கள், என்பதை விட விரும்புகிறார்கள் என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை.நேர்மையான முறையில் தேர்தல் நடத்தி, நிர்வாகத்திற்கு வருபவர்கள் மேலும் நேர்மையான முறையிலும், "அல்லாஹ்"வின் அச்சம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்றால் அதற்கு ஆச்சரியப்படவேண்டிய அவசியமேயில்லை. ஏனென்றால் தற்பொழுது உள்ள நிர்வாகத்தின் மேல் உள்ள அதிப்ருப்திதான் என்று ஜமாத்தார்கலுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை. "இன்ஷாஅல்லாஹ்" இனிவரும் நிர்வாகம் நல்லதொரு முன்னுதாரனமாக இருந்து நமக்கும்,நம் இளையதலைமுறையினருக்கும் நல்லதொரு வழிக்காட்டியாக் இருக்க "அல்லாஹ்" விடம் "தூ ஆ" செய்வோம்.

    ReplyDelete