அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Tuesday, November 22, 2011

விமர்சிப்பவர்களை விமர்சனம் செய்யாதீர்கள்

நிறைய வாசகர்களை கொண்ட KILIYANUR.NET இணையதளத்தில் இந்த செய்தியை பதிந்ததர்காக முதலில் எங்கள் வாழ்த்துக்கள்!. அவர்கள் வெளியிட்ட பதிவினை காண கீழே உள்ள இணையதள முகவரியை பார்க்கவும்.


http://kiliyanur.net/index.php?option=com_content&view=article&id=220:2011-11-20-11-42-43&catid=27:kiliyanur-news&Itemid=28

ஊரில் நடக்கும் விஷயங்களை வெளிநாட்டில் வாழும் நம் சகோதரரர்கள் அறிந்திட இணையதளம் பேருதவியாய் இருக்கின்றது. அப்படியிருக்கையில் உண்மையான சம்பவங்களை மக்களுக்கு தெரிவிக்காமல் இருப்பது அவர்களுக்கு இழைக்கும் துரோகம் போல. சிலரும் இணையதளம் நடத்துவதாய் கூறிக்கொண்டு நிர்வாகிகளுக்கு ஜால்ரா அடித்துகொண்டு மட்டும் இல்லாமல் இது போல் விமர்சனம் வெளியிட்டாலும் முதல் கண்டன குரல் இவர்களுயதாய் தான் இருக்கின்றது. எத்தனை காலம் இப்படியே இருக்க போகீறீர்கள்?. நீங்கள் விமர்சனம் செய்ய வேண்டாம், விமர்சிப்பவர்களை விமர்சனம் செய்யாமல் ஒதுங்கி கொள்ளுங்கள். வெளியிட்ட இந்த செய்தியில் ஏதேனும் தவறு இருக்கின்றதா? உண்மையான நிலை தெரியாமல் ஏதும் கூறாதீர்கள் என்று சொல்கிறீர்களே? எது உண்மையான நிலைமை, எல்லாருக்கும் தெரியும் நமதூர் நிர்வாகம் பற்றி, அதான் சமரச பேச்சு என அடிக்கடி நடக்கிறதே இது போதாதா நமதூர் செய்தி பற்றி ஊர் உலகம் அறிந்திட.எனவே மக்கள் விரும்பும் நிர்வாகம் அமையும் வரை இதுபோல் பல தரப்பிடம் இருந்தும் பல இடங்களிருந்தும் கண்டனம் வந்துகோண்டேருக்கும், இந்த முயற்சிக்கு அல்லாஹ் உதவி செய்வான். இந்த முயற்சியால் புதிய நிரவாகம் இன்ஷா அல்லாஹ் அமைந்தால் அதில் விமர்சித்தவர்களை விமர்சனம் செய்த நீங்களும் குளிர் காயலாம்.

No comments:

Post a Comment