அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Thursday, November 24, 2011

கட்டபஞ்சாயத்து


முன்பு நாம் வெளியிட்ட ஒரு கட்டுரையில் நம் நிர்வாகம் ரகசிய வாக்கெடுப்புக்கு முயற்சி செய்யும் ஒரு சகோதரரின் வீட்டிற்கு போய் மிரட்டியதாய் சுருங்க சொல்லியிருந்தோம் அதன் விபரத்தை இங்கே வெளியிடுகிறோம்.
நமதூரில் ரயிலடிதெருவை சார்ந்த M.A.P. தாஜுதீன் அவர்களை பெரியபள்ளி கட்டுமான பணி கணக்கு வழக்கு சம்பந்தமாக நிர்வாகத்தை விமர்சித்து வருவதாகவும் அது சம்பந்தமாக 13-11-2011 அன்று கூட்டம் உள்ளது, அதில் தாஜுதீன் அவர்கள் கண்டிப்பாக கலந்துக்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளபட்டார். இதற்கு முன் நடந்த கூட்டத்திற்கெல்லாம் அழைக்காமால்
இப்பொழுது அழைக்க காரணமென்ன? அக்கூட்டத்திற்கு வரமாட்டேன் என அப்பொழுதே உறுதிபட கூறியுள்ளார். பின்பு ஊர் நிர்வாக அலுவலக்கத்தில் ஊர் நிர்வாகிகள் ம்ற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் குறிப்பிட்ட அந்த தேதியில் குழுமியிருந்தனர். அந்த கூட்டத்திற்கு சொன்னதுபோல சகோதரர் தாஜுதீன் அவ்ர்கள் போகவில்லை. உடனே ஊர் பெரிய மனதர் ஒருவர் தாஜுதீனை கட்டி தூக்கி வரும்படி தெனாவெட்டாக கூறியுள்ளார். உடனே ஐந்து பேர் தாஜுதீன் வீட்டிற்கு இரவு 8-45 மணியளவில் சென்றுள்ளனர். அப்பொழுது அவர் வீட்டில் இல்லை, வீட்டில் பெண்கள் மட்டுமே இருந்துள்ளனர். அவர்களிடம் அந்த ஐந்து பேரும் வந்த விபரத்தை கூறிவிட்டு தாஜுதீன் எங்கே என வினவியுள்ளனர். அவர் வீட்டில் இல்லை என்றதும் அவ்ர்கள் திரும்பியுள்ளனர். அவர் விமர்சித்தார் என்று கூட்டம் கூடுகிறீர்களே உங்களை தான் ஊரே விமர்சிக்கிறதே? அப்பொழுதெல்லாம் வராத சொரனை இவர் கேட்டதும் வந்த பிண்ணனியென்ன? அவரை இதுபோல் இரவு நேரத்தில் கூப்பிட்டு எச்சரித்தால் விமர்சனம் செய்யும் மற்றவர்கள் அடங்கி போவார்கள் என்று எண்ணுனீர்களா? அவர் வரமாட்டேன் என்று கூறியும் வீடுபோய் தேடியதன் நோக்கமென்ன?. இதற்கு முன் இருந்த நிர்வாகத்திடம் இந்த பழக்கம் இருந்ததா? எல்லா பாலா போன பழக்கமும் உங்கள் காலத்தில் தான் தோன்றின. இதுபோல் இரவில் அழைத்து கட்ட பஞ்சாயத்து நடத்துவது உங்களக்கு புதிதல்ல பலமுறை இதுபோல் நடந்திருக்கின்றன.
சகோதரர் தாஜுதீன் அவர்கள் ஜனநாயக முறையில் தேர்தல் நடத்த முயற்சி செய்கின்றார், நீங்கள் செய்யும் அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுக்கிறார். அப்படியுள்ளவரை அச்சுறுத்தி ஊர் பிரச்சனையில் ஈடுபடாமல் இருக்கச் செய்ய பார்க்கிறீர்களே? ஊர் மக்கள் தெளிவாக உள்ளனர், எவரை அச்சுறித்தினாலும் மேலும் மேலும் வளர்வார்களே தவிர முடங்கி போய்விடமாட்டார்கள். இன்ஷா அல்லாஹ் ரகசிய வக்கெடுப்பு நடக்கட்டும் அப்பொழுது தெரியவரும் மக்களின் ஆதங்கம் என்னவென்று. ச்கோதரர் தாஜூதீன் அவர்கள் வீட்டிற்கு வந்து மிரட்டி சென்றதற்காக் அவர் காவல்துறையிடம் புகார் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டார், ஆனால் அவர் அலோசனை கூட்டத்திற்கு நோட்டீஸ் அடித்தார் என்ற காரணத்திற்காக அவர் மேல் காவல்துறையிடமும், வாட்டச்சியரிடமும் நீங்கள் புகார் கொடுத்துள்ளீர்களே? வட்டாச்சியர் முன் நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் ஜனநாயக முறையில் தேர்தல் நடத்த வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறதே? இதற்கு ஜமாத்தாரோடு கலந்தாலோசித்து அவர்கள் விருப்பம் போல் ஜனநாயக முறையில் தேர்தல் நடத்துவது என தீர்மானித்திருந்தால் ஜமாத்தாரின் நன்மதிப்பையாவது பெற்றிருக்கலாம். அதைவிட்டுவிட்டு ஜமாத்தாரிடம் நன்மதிப்பை இழந்து, வட்டாச்சியரிடம் கொட்டு வாங்கி வந்துள்ளீர்களே? நீங்கள் ஜமாத்தாரை மதித்திருந்தால் இந்த நிலைமை தேவையா?  எது எப்படியோ இன்ஷா அல்லாஹ் நீடுரில் ஒரு மாற்றாம் வரப்போகின்றது, அதன்பின் இந்த கட்டபஞ்சாயத்து வேலையெல்லாம் இருக்காது. அந்த கேடுகெட்ட பழக்கம் இந்த நிர்வாகத்தோடு போகட்டும்.

15 comments:

  1. kattapanchayathkkararkal pathilsollithan aha vendum itharku yaar pinnal irukirarkal enrum makkaluku theriyum.

    ReplyDelete
  2. really dirty management, and everybody knows who is behind


    Mohamed Nidur

    ReplyDelete
  3. yaar antha 4, 5 per. antha4, 5 perkalin peyarkalai thayavu seithu veliyidayum.

    ReplyDelete
  4. Mabrook


    please M.A.P. Thajudeen avarkalin veetirku nirvakathin sarbaga iravil srndra antha nagarigamillatha antha 4,5 perkalin peyarkalai thayayu seithu veliyidaum, appoluthuthan ur makkal therinthu kolvarkal.

    ReplyDelete
  5. Mabrook


    Antha iravil nirvakathin sarbaga M.A.P. Tajudeen avarkalin veetirku sendra antha nagarimillatha antha4,5 perin peyarkalai thayavu seithu veliyidaum. appoluthuthan avarkalai patri ur jamatharkal therinthu kollattum

    ReplyDelete
  6. ஊர் ரெண்டுப்பட்டால் யார்க்கு கொண்டாட்டம் ? சொல்லுங்க பார்க்கலாம்?

    ReplyDelete
  7. நீங்கள் ஊரின் ஒற்றுமைக்கு முயற்சி செய்கிறிர்களா இல்லை பிரிவினையை ஏற்ப்படுதுகிறிர்களா, இதனால் யாருக்கு லாபம்

    ReplyDelete
  8. பிரிவினையை ஏற்படுத்துகிறோமா? பிரிவினை என்றால் இரண்டு பக்கமும் சம அளவில் மக்கள் இருக்க வேண்டும். ஆனால் இங்கே ஊர் மக்களும் ஒரு பக்கமும், நிர்வாகிகள் மறு பக்கமும் உள்ளனர். தனக்கு ஆதாயம் கிடைக்கின்றது என்பதற்காக 30 - 40 மக்கள் அந்த பக்கமும் உள்ளனர். மீதம் உள்ள மக்கள் இந்த நிர்வாகம் இல்லாமல் புதிய நிர்வாகம் ரகசிய வாக்கெடுப்பு முறையில் நடத்த விரும்புகின்றனர். இதனை நீங்கள் பல நம்மூர் இணையதளங்களில் மக்களின் கமெண்ஸ் மூலம் அறியலாம். அதற்கு ஏன் இந்த நிர்வாகம் விலக மறுக்கின்றது என்பதுதான் எல்லோருடைய கோபமும். மக்கள் விரும்பா விட்டால் போக வேண்டியது தானே? கண்ணியம் இல்லாமல் எதையும் காதில் வங்காமல் இருக்கும் இந்த தலை(வலி)வர்களை நாம் எப்படி அகற்றுவது?

    ReplyDelete
  9. ungalakku vera velaye illaya ivan adha panraan idha panrran ,,neengala oru koottam amaipeenga apparamm ,adichukittu adhilirundhu pala kilaya piriveenga aaga motham ellam mollammaringadhaan... mudhalla avanavan karaya neekkeenal pala kootangala adichikka thevaiillai

    ReplyDelete
  10. ஊரை பிரிக்க நினைக்கிறார்களா?
    விரைவில் ஜமாத்தார்கள்
    இவர்களை விட்டு பிரிந்து செல்வது உறுதி. நீங்கள் சொல்லும் அந்த 40 பேரும் சேர்ந்து அவர்களின் குடும்பங்கள் ஜமாத்தில் இருந்தால் அவர்களுக்கு போதும்.அவரகளுக்கு பதவி தான் முக்கியம்.ஊர் ஒற்றுமை முக்கியம் இல்லை.இதுவரை நீடூர் மற்றும் கிளியனூர் இனைய தளங்களில் பார்த்தாச்சு நீங்கள் காட்டு கத்து கத்தினாலும், நாங்கள் காதில் வாங்க மாட்டோம் என்று இருக்கிறார்கள், இவ்வளவு பிரச்சனைக்குப் பிறகும் ஏதாவது செயல் படுத்துகிறோம் என முன் வந்தார்களா? யாரவது ஏதாவது எழதினால் இர்பான் உங்களுக்கு தெரியாது குட்டையை குழப்பாதீர்கள் எங்கிறார்கள்.அப்படி என்ன நடக்கிறது ஏன் நீங்களே கூறுங்களேன் நாங்களாவது தெரிந்துக்கொள்கிறோம். நீங்கள் நிச்சயாமாக நீர்வாகிகளின் குடும்பத்தில் ஓருவராக தான் இருப்பீர்கள்,உங்களை போல் நாங்கள் இருந்தாலும் எங்களுக்கும் கோபம் தான் வரும் இப்படி எழதுவதை பார்த்தால் ஆனால் இப்படி நிவாகிகள் நடந்துக்கொள்வது சரியா என உங்கள் மனசாட்சியை அல்லாஹ் நினைத்துக் கொண்டு கேட்டுப்பாருங்கள்,அல்லது வேறு யாராவது இப்படி செய்து இருந்தால் நீங்கள் அவர்களை விட்டு விடுவீர்களா.
    ஊரீன் இரவு நேரங்களில், யாராவது கண்ணியமானவர்கள்
    ஊர் விசயத்தை பேச செல்வார்களா? அதுவும் அதில் சிலர்
    ஊர் நிர்வாகத்திற்கு சம்மந்தம் இல்லாதவர்கள்!!!. இப்படிப்
    பட்ட தலை சிறந்த நிர்வாகத்தை சரி என்று ஏற்றுக்கொள்ளக்கூடிய முதல் மனிதர் நீங்களாக தான் இருப்பீர்கள். நிச்சயமாக அவர்களுக்கு ஏற்பட்ட மனவேதனையை
    அல்லாஹ் தாலா பிரிதொரு சந்தர்ப்பத்தில் உங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்தி அல்லாஹ் உங்களுக்கு புரிய வைப்பான்.
    சம்பந்தபட்டவர் பேசி விட்டார், நாங்கள் எப்படி
    சும்மா இருப்போம் எங்கிறீர்களா?


    இன்று அவர் மட்டும் பேசவில்லை உலகமே கேவலமாக
    பேசுகிறது. அதற்கு தான் சொன்னென் இனி உங்களை போன்ற
    40 பேர்கள் மட்டும் தான் இனி ஜமாத்தில் இருக்க முடியும்
    இனி உங்கள் அமைப்பிற்கு நீங்கள் தான் முத்தவல்லி ட்ரஸ்டி நிர்வாகஸ்த்தர்கள்
    நீங்கள் எப்படி பட்ட மோசமானர்கள் என்று தெரியுமா, அல்லாஹ்வின் பள்ளியிலே, ஊர் மக்களின் மத்தியிலேயே பட்ட
    பகலில் நடைபெற்ற தேர்தலை பஞ்சாக பரக்கவிட்டீர்கள். உங்களின் அரசியல் செல்வாக்கு என்ன? ஆட்கள் பலமென்ன?
    நிர்வாகிகள் நீங்கள், நீங்கள் தான் தேர்தலை நடத்தினீர்கள், நீங்கள் தான் தேதி குறித்தீர்கள், வஃக் போர்டுக்கு தெரியப்படுத்தினீர்கள், ஃவ்க்போர்டிலிருந்தும் ஆள் வந்தது
    ஆனால் தேர்தல் செல்லாது. சகோதரர்ரே
    உங்களுக்கு சிரிப்பை அடக்கமுடிகிறதா?
    நீடூர் ஜமாத்தர்கள் அவ்வளவு விளங்காதவர்களா?
    என்று தானே நினைக்கிறீர்கள். அப்படி இல்லை இன்று இவ்வூர் மக்கள் உலகில் கால் பதிக்காத நாடுகளும், துறைகளும் இல்லையென்று சொல்லும் அளவிற்க்கு வளந்துவுள்ளனர். அவர்கள் பயப்படும்
    ஒரே விசயம் ஊர் கண்ணியம், குடும்ப கௌரவம். இன்னார் பிள்ளை ஊர் பெரியவர்கள்ளை மதிக்கவில்லை என் பேசி விட்டால் என பயப்படுவதால் தான்.

    அவர்களின் பலவீனம் உங்களீன் பலம்

    வாழ்க உங்கள் ஜனநாயகம்
    ஊர் நிர்வாகம் தாமாக முன் வந்து எங்களுக்கு தேர்தல் நடத்துவதில் இன்ன பிரச்சனைகள் இருக்கிறது இதையெல்லாம்
    கலைவதற்கு அவகாசம் வேண்டும் எனறால் அந்த பிரச்சனையை
    நாங்களும் எங்கள் தோல் கொடுத்துக் கலைவோம்.
    அப்படியெதுவும் இல்லாமல் யாருக்கும் பதில் சொல்லாமல்
    இருப்பது அனைவரின் விமர்சனத்திர்கும் ஆலாகவே செய்வீர்கள்
    அதற்கு நீங்கள் தான் பொறுப்பு மீண்டும் வன்முறையை கட்டவிழித்து அமைதி பூங்காவாக இருக்கும் நீடுரை வன்முறை
    கலமாக மாற்ற நினைக்காதீர்கள். அப்படியானால் அப்பாவி ஜமாத்தார்கள் பொறுப்பல்ல. ஏனென்றால் அதற்கு ஒரே உதாரணம் நீடூர் ஆன்லைன். இதுவரை எந்த பிரச்சனைக்குறிய
    விசயத்தையும் கையில் எடுத்தது இல்லை இப்பொது
    அங்கு பார்த்தால் மக்கள் கொதித்து கருத்துக்களை எழதுகிறார்கள்
    மக்கள் மாறுகிறார்கள். உலகத்த்தில் சர்வாதிகாரம் எங்கும் வென்றதாக சரித்திரம் இல்லை. இந்த அடக்குமுறையும்
    சர்வாதிகாரமும் நீடூர் வரலாற்றீல் கரும்புள்ளீகளே!!!!!!

    ஏன் நீடூரான் என் எழதுகிறாய் துணிவிருந்தால் பெயரிலயே
    எழதுலாமே என் நினைக்கலாம். முதலில் நீங்கள் உங்கள் பெயரை காட்டுங்கள் எங்கள் பெயர்களை நாங்கள் வெளி
    யிடுகிறோம்

    ReplyDelete
  11. நாம் அனைவரும் ஒரே நோக்கத்திலும், ஒரே குறிக்கோளுடனும்தான் இருக்கிரோம், நம் நீடூர் நெய்வாசலுக்கு புதிய நிர்வாகம் வேண்டும் என்று. ஏனென்றால் நம் நிர்வாகத்தின் மேல் உள்ள அதிருப்திதான் காரணம். நாளுக்கு நாள் நிர்வாகத்தின் அனுகுமுறை மிகவும் மோசமாகவே உள்ளது. அதை உறுதிப்படுத்துவது போல் இரவில் சகோதரர் தாஜுதீன் அவர்களின் வீட்டிற்கு நிர்வாகத்தை சேர்ந்த, சேராத 4,5 நபர்கள் சென்று ஊரின் கணக்கு பார்க்க அழைத்திருக்கிறார்கள் என்றால், அவர்களின் நோக்கம் என்ன? பாரம்பரியமிக்க நீடூர் நெய்வாசலின் நிர்வாகத்தில் உள்ளவர்கள் எப்படி கண்ணியத்திற்கு உரியவர்களாக, ஊரின் கண்ணியத்தை காப்பவர்களாக, நமக்கும், வளரும் இளைய சமுதாயத்தினருக்கு வழிகாட்டியாகவும் இருக்க வேண்டாமா?
    அல்லது இரவில் பாரம்பரியமிக்க குடும்பத்தை சார்ந்த அந்த சகோதரரின் வீட்டிற்கு 4,5 ஆட்களை அனுப்பியதுதான் உங்களின் கண்ணியமா? இதுதான் இந்த நிர்வாகத்தின் நாகரீகமா? எதெற்கெடுத்தாலும், அடக்குமுறை, மிரட்டல். இதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்று ஜமாத்தார்களுக்கு நன்றாகவே தெரியும். ஜமாத்தை சேர்ந்தவர்கள் என்ன பேசினாலும், ஊரை எதிர்க்கிறான், ஊருக்கு எதிராக செயல்படுகிரான், இதுவே இந்த நிர்வாகத்தின் புலம்பலாக இருக்கிறது. ....ஏன் இந்த நிலைமை? இந்த நிர்வாகத்தின் நிர்வாக சீர்கேட்டாலும், அனுசரிப்பில்லாத அனுகுமுறையாலும் பாதிக்கப்படுவது ஊரின் வளர்ச்சியும், ஊரின் முன்னேற்றமும்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஊரின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் உதவ நினைப்பவர்கள் கூட இந்த நிர்வாகத்தினரின் போக்கால் தங்களது எண்ணங்களை புதிய நிர்வாகம் வரட்டும் என்று காத்திருக்கிறார்கள். ஜனநாயக முறையில் தேர்தல் வைக்க ஏன் தயங்குகிறீர்கள்? உங்களுக்கு மக்களின் ஆதரவு இருந்தால் நீங்களே மீண்டும் நிர்வாகத்திற்கு வாருங்களேன்? ஆனால் ஊர் ஜமாத்தார்களின் உணர்வுகளையும், நமதூர் சார்ந்த வலைதளங்களில் மக்களின் கருத்துக்களையும் பார்க்கும்போது, புதிய நிர்வாகத்தைதான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள், வரவேற்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. தெரிந்த பின்னும் இப்படி பிடிவாதமாக இருப்பது ஊரின் வளர்ச்சிக்கும், ஊரின் முன்னேற்றத்திற்கும் வழி வகுக்குமா? இந்த 10 வருடத்தை யாரும் மறக்க மாட்டார்கள்.

    ஊர் நலம் விரும்பி.

    ReplyDelete
  12. தற்பொழுது உள்ள நிர்வாகத்தினால் ஊரின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்க்கும் தடையாகத்தான் இருக்கும். ஊரின் நலன் கருதி என்று புலம்புவர்கள், ஊரின் நலன் கருதினால் மதிப்பிற்குரிய ஜமாத்தார்களின் குரலுக்கு செவி சாய்த்திருப்பார்கள். இந்த நிர்வாகத்தினர் ஊரின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்க்கும் மட்டுமா தடையாக இருக்கிறார்கள்? எத்தன்னை நண்பர்கள் பகைவர்களாக, ( இனிய இஸ்லாம் சொன்ன சொந்தங்களை வலுவாக பற்றி கொள்ளுங்கள் )எத்தனை சொந்தங்கள், உறவுகள் பகைவர்களாக ஆனதற்கும் இந்த நிர்வாகம்தான் முக்கிய காரணம். இதை யாரும் மறுக்கவோ முடியாது. சிந்தித்து பாருங்கள். இவர்கள் ஊரின் நலன் விரும்புபவர்களா?

    முகமது நீடூர்

    ReplyDelete
  13. 12 VARUDA KALATHIL SEIYATHA SATHANAIYEI ITHAN PERAGU SEIYA PORINGALA.NIDUR IN VALARCHIKAGA NENGAL SEITHA NALLA KARIYATHI,VETRI KARAMA MUDITHEN ENDRU SOLLUNGAL PARPOM?AANNAL NENGAL SEITHA ARAJAGAM,AYOKIYA THANAM MIGAVUM ATHIGAM..JAMATH ONDRU KUDINAL YEN NENGAL "POLICE STATION KUM,PEACE MEETING KUM"POI KEVALA PADURA INTHA NERUVAGAM NAMAKU THEVAYA..?NENGAL ORUKU SERTHA PANATHAI VIDA,"POLICE KUM,PEACE MEETING KUM,VAKKILUKUM PANIYA SELLAVUGALAI PARTHAL..ENNUM ORU PALLAIVASAL KATTALAM.."ITHU ELLAM YARU UDAYA KASU PANAM"KONCHAM SINTHIYUNGAL?ITHARKU"NIDURAN PONDRA ATKAL JALRA ADIKURALGAL"INSHA ALLAH MIGA VERAIVIL ELECTION NADAKUM,MEGAVUM KEVALAMANA VOTE VIDYASATHIL EVARGALAI VIRATI ADIPOM.

    ReplyDelete
  14. அஸ்ஸலாமு அலைக்கும்

    ஒற்றுமையை விட வலிமையும், சிறந்ததும் எதுவும் கிடையாது. ஆனால் எத்தனையோ நண்பர்கள், எத்தனையோ உறவுகள் எல்லாம் பகைவர்களாக ஆக்கியதற்க்கு இந்த நிர்வாகம்தான் என்பது சிந்தித்து பார்த்தால் நன்றாக தெரியும். எதெற்காக? எல்லாம் அவர்களை பாதுக்காத்து கொள்ளவும், அதிகாரத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற சுயநலம்தான் காரணம். இவர்களுக்காக நம் நட்பும், உறவுகளும் ஏன் இழக்க வேண்டும். நன்றாக சிந்திக்க வேண்டும். இந்த நிர்வாகம் போய்விடும், ஆனால் நம் நண்பர்களும், உறவுகளும் திரும்ப கிடைக்குமா? சகோதரர் எழுதியது ஒன்றே போதுமே. நம் முன்னோர்கள் கண் நிறைவோடு வாழ்ந்த ஊரை விட்டு போகாமல் " அல்லாஹ் " தான் காப்பாற்ற வேண்டும், இது ஒன்றே போதுமே. இப்படி ஒரு மன நிலைமைக்கு ஆளாகிறோம் என்றால் இந்த நிர்வாகத்தின் மேல் ஜமாத்தார்கள் எந்த அளவுக்கு வெறுப்படைந்திருக்கிறார்கள்? தயவு செய்து இனி யாரும் இவர்களுக்கு துணைபோக வேண்டாம். அதிக பார்வையாளர்களை கொண்ட நீடூர் ஆன் லைன் போன்ற இனையதளங்கள். " இன்ஷா அல்லாஹ் " இந்த நிர்வாகத்தின் தவறுகளையும், அதிகார துஷ்பிரயோகங்களையிம், இரவில் ஜமாத்தார்களின் வீட்டிற்கு ஆட்களை அனுப்புவது போன்ற கண்ணியமில்லாத செயல் எல்லாவற்றையிம் சுட்டி காட்ட வேண்டும்.அடாவடிதனத்தையிம், அடக்குமுறையையிம் நிருத்த வேண்டும். ஊரின் சூழல் பழைய நிலைமைக்கு திரும்ப வேண்டும். ஊரின் நலன் கருதி பாரம்பரியமிக்க நமதூர் ஜமாத்திரின் நலன் கருதி செயல்பட வேண்டுகிறோம். அந்த நன்மை உங்களையே வந்து சேரும்.

    ஊர் நலம் விரும்பி

    ReplyDelete
  15. MARANATHAI NINAITHU ALLAUDAYA BAYAM ENDRU ONDRU IRUNDAL IVARGAL ORUPOTHUM PATHAVIYINMEL MOGAM KOLLA MATTARGAL

    ReplyDelete