அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Thursday, November 17, 2011

ஆடத்தெரியாதவன் மேடை கோணல் என்றானாம்!!!

நமது நீடுரில் மூன்றாண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை தேர்தல் நடைபெறாதலால், மக்கள் அனைவரும் தேர்தல் நடத்தும் படி நிர்வாகிகளிடம் பல முறை கூறியும் ஏதாவது ஒரு நொண்டி சாக்கை கூறி தேர்தலை தள்ளிப்போட்டு வந்தனர், இதனால் மக்கள் நேரடியாக வக்பு போர்டிடமும் பல முறை மனு அளிக்கவே, வக்பு போர்டு ஆய்வாளர் தேர்தலை நடத்த தேதியை நிச்சயிக்கும்படி நிர்வாகிகளிடம் அறிவுறுத்தியிருந்தனர். இதனால் வேறு வழியின்றி 27-11-2011 அன்று நிர்வாக தேர்வு குரல் வாக்கெடுப்பு மூலம் நடைபெறும் என தஞ்சை வக்பு போர்டு ஆய்வாளருக்கு தெரிவித்திருந்தனர். ஆனால் உலகெங்கும் வாழும் நமதூர் சகோதரர்கள் ரகசிய வாக்கெடுப்பு மூலம் தான் தேர்தலை நடத்தும் படி வக்பு போர்டிடம் கடிதமாகவும், SMS மூலமாகவும் மற்றும் பல இணையதளம் மூலமாகவும் தங்களது நியாயமான காரணக்காரியங்களோடு எதற்காக ரகசிய வாக்கெடுப்பு வேண்டும் என்பதை விளக்கியிருந்தனர். அதற்கு ஒருபடி மேல் போய் மனுவாக எழுதி நமது ஊர் ஜமாத்தாரிடம் கையெழுத்து வாங்கி அதன் மூலம் எத்தனை மக்கள் ரகசிய வாக்கெடுப்புக்கு அதாரவாக இருக்கின்றனர் என்பதை வக்பு போர்டிற்கு தெரியபடுத்தலாம் என நினைத்து மக்களிடம் கையெழுத்து வாங்கிய பொழுது எப்போழுதுமே மந்தமாக இருக்கும் நமது நிர்வாகத்தார் இதனின் விபரீத்தை உணர்ந்து ஒரு அறிவிப்பை வெளியிட்டனர், அந்த அறிவிப்பானது யாரும் ரகசிய வாக்கெடுப்பு மனுவுக்கு கையெழுத்து கேட்டால் போட வேண்டாம் எனவும், நமதூர் வழக்கப்படி கோரஸ் அல்லது குரல் வாக்கெடுப்புதான் நடைபெறும் எனவும் தெரிவித்திருந்தனர். இந்த அறிவிப்பு பள்ளி நோட்டிஸ் போர்டிலும் வைக்கப்பட்டுள்ளது.

நமதூரில் ஏக சர்வதிகார ஆட்சி தான் நடந்து கொண்டிருக்கிறது. அந்த ஆட்சியில் தான் மக்களின் உணர்வை மதிக்காமல் ஆட்சியை எப்படியெல்லாம் தக்கவைத்துகொள்ளலாம், எப்படியெல்லாம் பிச்சையெடுத்தும், பிடுங்கியும் தனது நலத்தை நல்ல நிலைமையில் வைத்துகொள்ளலாம் எனவும் எண்ணுவர். அதற்கு சற்றும் குறையாது நமது நிர்வாகிகள் சுயநலத்தொடு உள்ளனர். இந்த ஆட்சியை எல்லாம் மக்கள் எப்படி தூக்கி எறிந்தனர் என்பதை சமிபத்தில் நடந்த பல சம்பவங்களால் நாம் அறியலாம். கையெழுத்து போடுகிறார்கள் என்றால் எல்லாருமா போடப்போகின்றனர்?, படித்து பார்த்து விருப்பம்முள்ளவர்கள் மாத்திரம் தான் போடப்போகின்றனர். இதனை செய்ய கூட மக்களூக்கு உரிமை இல்லையா? அப்படி தெரிவிக்க மூன்றாண்டுக்கு முன்னரே பதவி காலம் முடிந்து இப்பொழுதும் பதவியில் ஒட்டி கொண்டிருக்கும் உங்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது?.கையெழுத்து போட்டால் மக்களின் விருப்பம் என்னவென்று வக்பு அதிகாரிகளுக்கு தெரிந்துவிடும் என பயப்படும் நீங்கள் இவ்வளவு அவமானம் அடைந்தும் பதவி ஆசை உங்களை இப்படி பாடாய்படுத்துகிறதே! இதெல்லாம் ஒரு வாழ்க்கையா? நிரந்தர மறுமையை மறந்து செயல்படுகிறிர்களே?.

இப்பொழுது நான் பதவி விலகினால் என் மேல் உள்ள வழக்குகளை நான் தனிபட்ட முறையில் சந்திக்க வேண்டும் அது எல்லாம் முடிந்தால் தான் நான் பதவி விலகுவேன் என நமதூர் முத்தவல்லி கூறியிருந்தாராம். வினையை விதைத்தவன் தானே வினயை அறுவடை செய்ய வேண்டும். அப்படி கூறியிருந்தவர் இப்பொழுது ரகசிய வாக்கெடுப்புக்கும் மறுக்கிறார் என்றால் எங்கேயோ உதைக்கிறதே?. கோரஸ் முறை மூலம் தமது  விருப்பமுள்ளவர்கள் வந்தால் நீங்கள் அமுக்கிய தொகையை பற்றியெல்லாம் கேள்வி கேட்க மாட்டார்கள் என்பதனால் தான் ரகசிய வாக்கெடுப்பை எதிர்க்கிறீர்களா?. அதுமட்டுமில்லாது கோரஸ் நமதூர் பாரம்பரியம், அதை மாற்றி ரகசிய வாக்கெடுப்பெல்லாம் நடத்த முடியாது என்று வேறு பிதற்றியிருக்கிறீர்களே? நமதூர் பாரம்மரியத்தை காப்பவரா நிங்கள்?. அப்படி பாதுகப்பவர் என்றால் 12-04-2007 அன்று நடந்த தேர்தலில் மட்டும் கையெழுத்து முறையை கொண்டுவந்து நமதூர் பாரம்பரியத்தை பாலாக்கினீர்களே?. அதுமட்டுமில்லாது நிர்வாகி தேர்தல் காலாகாலமாக வெள்ளி ஜும்மா பின்பு தானே நடைபெறும் அதை மாற்றி ஞாயிற்று கிழமையாக்கினீர்களே?. 12 நாள் மஃலுத் சோறை பள்ளி காரணம் கூறி நிறுத்தி வைத்திருந்தீர்களே?, அந்த 12 நாளும் இஷாவுக்கு பின் தான் பயான் நடைபெறும் அதை மஃரிப் பின் மாற்றினீர்களே? இவவளவு பாரம்பரியத்தையும் உங்கள் வசதிக்காக மாற்றிய நீங்கள் இப்பொது ரகசிய வாக்கெடுப்புக்கு மட்டும் பாரம்பரியத்தை மாற்ற முடியாது என்றால் என்னஅர்த்தம்? தோல்வி பயம்தானே? இப்படியே நொண்டி சாக்கு சொல்லி தப்பிக்கலாம் என்று நினைக்காதீர்கள். இன்ஷா அல்லாஹ் இந்த முறை கண்டிப்பாக ரகசிய வாக்கெடுப்புதான் நடைபெறும், அல்லாஹ் இதற்கு அருள் புரிவான். மேலும் இவர்கள் பலமுறை தேர்தல் நடத்த முன்வந்தனராம்!, அதற்குள் மேல் முறையீடு என்று யாராவது வழக்கு தொடர்ந்து தேர்தல் நடத்த விடாமல் தடுக்கிறார்களாம்!. நீங்கள் ரகசிய வாக்கெடுப்பு எல்லாம் முடியாது கோரஸ் தான் என்று சொன்னதால் தானே மக்கள் நீதிமன்றத்தை நாடினர். நீங்கள் ஒரு கண்துடைப்பு தேர்தலை நடத்த பார்ப்பீர்கள் அதற்கு எல்லாரும் ஏன் என்று கேள்வி கேட்காமல் ஒத்துகொள்ளவேண்டுமா? இந்த முறை ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் மேல் முறையீடு செய்வதய் தவிர்க்கலாம்.

இந்த நிர்வாகத்தினர் சொல்லும் அடுத்த குற்றச்சாட்டு ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் திறமை இல்லாதவர்கள் எல்லாம் பதவிக்கு வந்து விடுவார்களாம் அதுமட்டுமில்லாது பணம் கொடுத்து வாக்குகளை வாங்கி விடுவர்களாம், இதற்கு ஆடத்தெரியாதவன் மேடை கோணல் என்றானாம் என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகின்றது. திறமை இல்லாத நீங்கள் மறுபடியும் உள்ளே வரக்கூடாது என்று தானே மக்கள் ரகசிய வாக்கெடுப்புக்கு கோருகின்றனர், நீங்கள் என்ன உல்டாவாக கூறுகிறீர்கள். பணம் கொடுத்து வாக்கினை வாங்க வசதி படைத்தவரகள் நீங்களே! அதற்கு மக்கள் தான் உங்களை கண்டு பயப்பட வேண்டும். ஊர் செய்தியை எல்லாம் இணையதளம் மூலம் வெளியிடுவதை நிறுத்த வேண்டும், இறப்பு செய்தியை கண்டு வெளிநாட்டில் உள்ளவர்கள் என்ன செய்ய போகின்றனர் என்றும் நமது திறமையான நிர்வாகிகள் நம் மக்களை பார்த்து கேட்டார்களாம். பெற்றோர், மனைவி மக்களை பிரிந்து வாடும் வெளிநாட்டில் உள்ள நமதூர் சகோதரர்கள் உண்மையில் நமதூரில் என்ன நடக்கின்றது என்பதை அறிய ஆவலாய் உள்ளனர். அவர்களுக்காகதான் ஊர் நிர்வாகிகளுக்கு ஜால்ரா போட்டுகொண்டு எந்த உண்மையும் வெளியே தெரியாமல் சிலர் நடத்தும் இணையதளம் போன்று இல்லாமல் மக்கள் சேவையாக ஊரில் நடக்கும் உண்மையை இணையதளம் மூலம் எழுதுகின்றனர், மக்களும் அதை படித்து நிர்வாகத்துக்கு எதிராக பல விமர்சனத்தை எழுதியுள்ளனர். அவர்கள் எழுதியதில் ஏதேனும் தவறு, வீண்பழி உள்ளதா? அத்தனையும் உண்மை செய்திகள். அதை தடுக்க நினைப்பதேன்? மடியில் கணம் இருந்தால் தானே வழியில் பயமிருக்கும்.

நமதூரில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த பெரும் முயற்சி மேற்கொள்ளும் ஒரு சகோதரரின் வீட்டிற்கு நான்கைந்து பேர் சென்று அந்த சகோதரர் பள்ளி கட்டுமான பணி சம்பந்தமாக கணக்கு கேட்டு விமர்சித்திருந்தார்,அதனால் அவரை பள்ளி நிர்வாக அலுவலகத்திற்கு அழைத்து செல்ல வந்துள்ளோம், அங்கு வந்து கணக்குகளை பார்க்கட்டும் என்றுள்ளனர், அந்த சகோதரர் அப்பொழுது வீட்டில் இல்லாததால் திரும்பி சென்றுள்ளனர். இப்படி தனியாக அழைத்து கணக்கு காட்ட அழைத்தீர்களா? அல்லது மிரட்டி இனி இதுபோல் கணக்கெல்லாம் கேட்க கூடாது என எச்சரிக்கவா? இது போல் மிரட்டி பணிய வைக்கலாம் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள், நமது ஜமாத்தார் நீங்கள் பதவியை ராஜினாமா செய்யும் வரை கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பர். இந்த மிரட்டும் கலாச்சாரம் முன்பிருந்த நிர்வாகத்திடம் இருந்த்தா? நீங்கள் வந்தபின்பு தான் இத்தனை அட்டுழீயங்களும், அனாச்சாரங்களும் அரங்கேறுகின்றன. இனியும் இதுபோல் நொண்டி சாக்குகளை சொல்லி ரகசிய வாக்கெடுப்பு நடத்த விடாமல் தடுத்தால் மக்கள் எல்லாரும் ஒன்றிணைந்து உங்களை தூக்கி எறிவார்கள் அது அல்லாஹ்வின் உதவியுடன் இன்ஷா அல்லாஹ் நடக்கும். போதும் உங்களது சிறப்பான, திறமை மிகுந்த நிர்வாகம், இனி எங்களுக்கு மக்களின் நலனில் அக்கறையுள்ள மக்கள் விரும்பும் நிர்வாகம் வேண்டும்.

5 comments:

  1. ஃபைஜூர் ஹாதிNovember 19, 2011 at 1:02 PM

    இவ்வளவு பிரச்சனைகளையும், நெருக்கடிகடிகளையும், கண்டனங்களையும், விமர்சனங்களையும் மீறி பதவியிலிருந்து அகல மறுப்பதன் பிண்ணனியில் ஏதோ இருப்பதை உணரமுடிகிறது. பாரம்பர்யம் பற்றி கூறும் இவர்கள் எதை பாரம்பர்யம் என்று கூறுகிறார்கள் என்பதுதான் புரியவில்லை
    தேர்த்தெடுக்கப்படாமலேயே மூண்று ஆண்டுகளாக ஜமாத்தார்களின் விருப்பமே இல்லாமல் பதவியில் இருப்பதுதான் பாரம்பர்யமா? பதவி விலக்கோரி கண்டன ஆர்பாட்ட போஸ்டர்கள் அடித்தும் பதவி விலாகததுதான் பாரம்பர்யமா? அல்லது மூன்று மாதத்தில் பதவி விலகுகிறோம் என்று ஆர்.டி.ஓ முன்னிலையில் கையெழுத்திட்டுவிட்டு பதவி விலகாமல் இருப்பதுதான் பாரம்பர்யமா? அல்லது கோர்டில் வழக்கு தொடர்ந்து பதவி விலக கோரும் அளவிற்கு ஊரின் நிலையை கொண்டு சென்றதுதான் பாரம்பர்யமா? அல்லது ஜமாத்தார்கள் புதிய முத்தவல்லியை தேர்ந்தெடுத்த பிறகும் அவரிடம் பதிவியை கொடுக்க மறுப்பதுதான் பாரம்பர்யமா? எது தான் பாரம்பர்யம் நமக்கு ஒன்றும் விளங்கவில்லையே.

    ReplyDelete
  2. அன்பிற்கினிய சகோதரர்களே
    வரலாற்று சிறப்புமிக்க ஊர், நம் ஊருக்கே பெருமை சேர்க்கும் ஜாமியா மிஸ்பாஹுல்ஹுதா,அமைதியான நிர்வாகம், அழகான சூழல் எல்லாம் எங்கே? எல்லாம் பத்து வருடத்திற்கு முன்னால். ஆனால் இன்றோ?...........?
    ஒவ்வொரு நாளும் ஊர் நிர்வாகத்தினரின் அனுகுமுறை மிகவும் கேவலமாக போய் கொண்டுயிருக்கிறது, எல்லோரும் அறிந்ததே. எல்லாவற்றிற்கும் மேலாக நம் ஊரின் பாரம்பரியமிக்க குடும்பத்தை சேர்ந்த ஒரு சகோதரரின் வீட்டிற்கே நிர்வாகத்தின் சார்பாக 4,5 பேர் சென்று அதுவும் இரவு நேரத்தில் சென்று கணக்கு காண்பிக்க அழைத்திருக்கிரார்கள் என்றால், இவர்களின் நோக்கம் என்ன? வரலாற்றின் சிறப்புமிக்க முஸ்லீம் முஹல்லாவில் இதுதான்முறையா? பாரம்பரியம், பாரம்பரியம், என்று கூக்குரலிடும் இவர்களுக்கு இதுதான் பாரம்பரியமா?இந்த நிர்வாகத்தினரால் ஊரில் இருக்கும் நமக்குத்தான் கேவலமாக இருக்கிறது.இதற்கு பின்னனியில் யார் இருக்கிறார்கள்??????? யாராக இருந்தாலும் அதற்காக ஒரு நாள் வருத்தப்பட்டுத்தான் ஆக வேண்டும்

    ReplyDelete
  3. சே என்ன இது அநியாயம்? நம் நீடூரிலா இப்படி எல்லாம்நடக்கிறது வன்மையாக கண்டிக்கிறோம்.தரங்கெட்ட நிர்வாகத்தினர்தான் அனுப்பினார்கள் என்றால் அந்த 4,5 பேர்களுக்கும் நல்லறிவு இல்லையா? ஏன் இவ்வளவு தரம் கெட்டு விட்டார்கள். இனிமேலும் இவர்கள் திருந்த வில்லையென்றால், ஊரில் உள்ளவர்களிம் நிலைமை என்னவாகும்? அல்லாஹ் தான் காப்பாற்ற வென்டும்.

    உர் நலம் விரும்பி

    ReplyDelete
  4. இன்று மிரட்டல் அவருக்கு ஏற்பட்டு இருக்கிறது, கேட்கவே வெட்ககேடாக இருக்கிறது.இவர்கள் பொகிற போக்கு ஊரின் நிலைமையை நினைக்கவே பயமாக உள்ளது. இந்த பத்து வருடத்தை பாரம்பரியமிக்க நீடூர் ஜமாத்தார்கள் மறக்க மாட்டார்கள் என்பதுதான் யாரும் மறுக்க முடியாத உண்மை.

    முகமது
    நீடூர்

    ReplyDelete
  5. அந்த நண்பரை தூக்கி வர சென்ற அந்த நான்கு ஐந்து பேர் யார்? கேவலமாக இல்லை உங்களுக்கு? உங்கள் வீட்டில் இப்படி ஒரு சம்பவம் நடந்தால் உங்கல் மன நிலை எப்படி இருக்கும். "அல்லாஹ்"வின் பய அச்சத்தோடு நடன்து கொள்ளுங்கள். இதுவே நிர்வாகத்தினருக்கு கடைசியாக இருக்கட்டும்.

    ReplyDelete