நமதூர் நலவிரும்பிகளால் மக்கள் அலோசனை கூட்டம் நமதூர் அல்ஹாஜி பள்ளியில் நாளை(20/092011) நடைபெறுவதாய் இருந்தது. ஆனால் நமதூர் நிர்வாகிகள் வழக்கு நிலுவையில் உள்ளபோது இதுபோல் கூட்டத்தை அனுமதிக்கக்கூடாது என காவல்துறையிடம் ஒரு புகார் அளித்துள்ளனர். மேலும் வழக்கம் போல் வட்டாச்சியரை அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் கோரியுள்ளனர். இதன் மூலம் இவர்கள் எவ்வளவு தரங்கெட்டு நடந்துள்ளனர் என்பது அனைவருக்கும் புலப்படும். நாளை கூடும் கூட்டமானது யாரையும் கண்டனம் செய்யும் கூட்டம் இல்லை, எந்த ரகசியக் கூட்டமும் இல்லை, சாதாரண மக்கள் அலோசனை கூட்டம். இக்கூட்டத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த ஜமாத்தாரின் அலோசனைகளை பெறவும், அதை செயல்படுத்த ஒரு கமிட்டியும் அமைக்கவிருந்தனர். அப்படி கூடி முடிவெடுக்க ஜமாத்தாருக்கு உரிமையில்லையா?, இது ஜனநாயக நாடுதானே? முன்பு நாம் சொன்னதுபோல் சர்வதிகார முறையைதான் இந்த நிர்வாகத்தினர் கையாள்கின்றனர். மக்கள் கூடினால் இவர்கள் எதற்காக பயப்படுகிறார்கள்? அமைதி பேச்சுக்கு அழைத்துள்ளார்களே கடைசியாக நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் சொன்ன தீர்மானங்களை இவர்கள் நிறைவேற்றினார்களா? யாரை ஏமாற்ற பார்க்கிறீர்கள்? இப்படியே காலம் தள்ளி நீங்கள் செய்த தப்பிற்கு தண்டனை கிடைக்காமல் தப்பிவிடலாம் என்று எண்ணுகிறீர்களா? இன்ஷா அல்லாஹ் மக்கள் தெளிவாக உள்ளனர் உங்களை பதவியிலிருந்து தூக்கியெறிய வேண்டுமென.
ஜமாத்தினர் ஒன்றுபட கூடாது என்பதில் தற்போதைய நிர்வாகிகளை இயக்குபவர்கள் எவ்வளவு பிடிவாதமாக இருக்கிறார்கள். ஆலோசனைக்கூட்டம் கூட நடத்தகூடாது என்று செல்லுமள்விற்கு ஊரை அடிமைப்படுத்திவிட்டார்கள். இவ்வளவு துணிச்சலும், அடாவடிகளுக்கும் பின்புலமாக ஒரு தீய சக்தி இருக்கிறது. நிர்வாகிகள் என்று சொல்லக்கூடியவர்களில் ஒருவர் கூட தாசில்தார் கூட்டத்திற்கு போகவில்லை. எப்படிதான் இவர்கள் வெள்ளையும் ஜொள்ளையுமா அலைகிறார்களோ. கொஞ்சமும் சூடு சொரனை வேண்டாம். இவர்களால் இவர்களின் குடும்பத்தினருக்குதான் கேவளம்.தனிப்பட்ட இரண்டு நபர்களின் விரல்சைவிற்கு கூத்தாட்டம் போடுகிறார்களே கொஞ்சம் கூட வெட்கமில்லையா.
ReplyDeleteஜமாத்தினர் ஒன்று சேர கூடாது, அப்படி சேர்ந்து விட்டால் பயம், ஊர் நிர்வாகத்திற்கு ரகசிய வாக்கெடுப்பு என்றால் பயம், இப்படி எதெற்கெடுத்தாலும் பயம் ஏன்..........? நிர்வாகத்தில் உள்ள நீங்கள் தெளிவாக இல்லை என்பது ஊரில் ஜமாத்தார்களுக்கு தெளிவாக தெரிகிறது. ஜமாத்தார்கள் மிகவும் கவனமாக உங்களுடைய ஒவ்வொரு அசைவுகளையும் கண்கானித்து வருகிரார்கள்.எவ்வளவு விமர்சனங்கள், பேச்சுக்கள்..../ கேட்கும் எங்கலுக்கும், படிக்கும் எங்கலுக்கே கேவலமாக உள்ளது.உங்கலுக்கு ஒன்றுமே தோணவில்லையா. உங்கள் வீட்டில் உள்ளவர்கள் கூட ஒன்றும் சொல்வதில்லையா?
ReplyDeleteஊர் நலம் விரும்பி.