அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Sunday, May 6, 2012

ஊர் கூட்டமா? உஷார்!!!

கடந்த வெள்ளிகிழமை(04-05-2012) ஜும்மாவின் போது ஒரு அறிவிப்பு  செய்துள்ளார்கள். அது என்னவென்றால் M.A.P. தாஜுதீன் அவர்கள் ஊர் நிர்வாக தேர்தல் ரகசிய வாக்கெடுப்பு மூலம் தான் நடத்த வேண்டும் என உத்தரவு பெற்றுள்ளார். இது சம்பந்தமாக ஊர் கூட்டமுள்ளது, தேதி பிறகு அறிவிக்கப்படும் என கூறியுள்ளனர். ஜமாத்தார்களே நாம் இப்பொழுது தான் உஷாராக இருக்க வேண்டும். ஏற்கனவே வக்பு போர்டு ரகசிய வாக்கெடுப்புக்கான வேலைகளுக்கு ஆயத்தமான நிலையில் இந்த தீர்ப்பால் என்ன ஆலோசனை தேவைப்படுகிறது? இவர்கள் ஆலோசனைக்கு வாருங்கள் என்று முன்னாள் கூட்டிய கூட்டத்தில் என்ன நடந்தது? ஆர்வமாய் போன ஜமாத்தார்களிடம் வெத்து பேப்பரில் கையெழுத்து வாங்கிக்கொண்டு ஜமாத்தார்களின் பலத்த எதிர்ப்பையும் மீறி தற்காலிக நிர்வாகிகள் என அவர்களே சிலரை முன்மொழிந்து அவர்களையே தேர்ந்தெடுத்து நியமனம் செய்தார்களே! இதுவரை இதற்கு முறையாக அறிவிப்பை வக்பு போர்டிடம் இவர்கள் கொடுக்கவுமில்லை. அதுபோல் செய்யதான் இந்த கூட்டமுமா?

முன்பு நடந்த தேர்தலில் ஜெயித்த சகோதரர் அலியிடம் பதவியை வழங்காமல், அடாவடியாய் பதவிகாலம் முடிந்தும் தற்காலிக நிர்வாகிகளாய் தொடர்ந்து பதவியிலேயே நான்கு வருடங்கள் ஒட்டி கொண்டு, சமீப காலமாய் பலத்த எதிர்ப்பு கிளம்பவே முறையாக தேர்தலை நடத்தாமல் எந்த முன் அறிவிப்புமின்றி ஆலோசனைக்கு வாரீர் என அழைத்து புதியதோர் தற்காலிக நிர்வாகம் என்று மறுபடியும் அமைத்தீர்களே! அது போல் இந்த கூட்டத்தில் என்னன்ன பிளான் வைத்துள்ளார்களோ? ஒரு வேலை தாஜுதீன் அவர்கள் இத்தேர்தலில் தனிமை படுத்தும் விதமாக அவருக்கு எதிராக ஜமாத்தாரை திரட்டதான் இந்த கூட்டமா? ஜமாத்தார் ஒரு செய்தியை நன்கு விளங்க வேண்டும், தாஜீதீன் அவர்கள் தனி ஆளாக நீதிமன்றம் அணுகி இந்த தீர்ப்பை பெறவில்லை, அவர் ஊருக்கு எதிரானவருமில்லை. ரகசிய வாக்கெடுப்பு வேண்டும் என பல நிலைகளில் நிர்வாகத்திடம் போராடியும் எந்த பயனும் கிடைக்காததினால் ரகசிய வாக்கெடுப்பு நடத்தியே ஆக வேண்டும் என ஒரு கமிட்டி உருவானது. அக்கமிட்டியின் முடிவின் படியே உயர் நீதிமன்றம் அணுக வேண்டுமென முடிவு செய்து அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். இதை ஏற்றுகொள்ள முடியாத நிர்வாகிகள் இதற்கு எதிராக எதாவது செய்தாக வேண்டும் என நினைத்து இந்த கூட்டத்தை கூட்டுகின்றனர். முன்பு  நடந்த கூட்டத்தில் வெத்து பேப்பரில் வாங்கிய கையெழுத்தை வைத்து ஒரு புகார் மனுவாக வக்பு போர்டிற்கு அனுப்பியுள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அந்த மனுவில் ஊரில் 15பேர் சேர்ந்து கொண்டு தவ்ஹீத் பள்ளி கட்டுகின்றனர் அதற்கு தகுந்த நடவடிக்கை வேண்டுமென கோரியுள்ளனராம். இப்படி முறையற்ற வகையில் வாங்கிய கையெழுத்தை அவர்களுக்கு சாதமாக பயன்படுத்துகின்றனர்.

எனவே இம்முறை நடக்கபோகும் கூட்டத்தில் ஜமாத்தார்கள் கொஞ்சம் உஷாராய் இருந்து ரகசிய வாக்கெடுப்புக்கு எதிராக எதாவது தீர்மானம் கொண்டு வந்தால் கண்டிப்பாக ஊரின் நலனை கருத்தில் கொண்டு அதனை கடுமையாக எதிர்க்க அனைவரையும் கேட்டு கொள்கிறோம்.இந்த முறை கண்டிப்பாக தனக்கும் தன் குடும்பத்துக்கும் பாடுபடுபவர்களை புறந்தள்ளிவிட்டு ஊருக்காக மட்டும் பாடுபடுபவர்களுக்கு ஓட்டளித்து மற்ற ஊர்களுக்கு நம் நிர்வாகம் ஓர் எடுத்துகாட்டாய் விளங்கிட எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிராத்திப்போமாக!!!


9 comments:

  1. ஏகத்துவ பள்ளி வருவதால் இவர்களுக்கு என்ன இழப்பு? ஏன் இந்த கூப்பாடுபோடுகிறார்கள். காலம் காலமாய் மத்ஹப் பள்ளியை வைத்து என்ன சாதித்தார்கள் இஸ்லாத்துக்காக? சீரனிசோத்தையும், மவ்லீதையும் தவிர. நாம் யாரையும் வரக்கூடாது என்று தடைசெய்ய பள்ளி கட்ட வில்லை. அல்லாஹ் சொல்கிறான் சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது.நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும் என. உணர்ந்தால் சரி.

    ReplyDelete
  2. நீடூரில் பல வருடங்களா கட்ட பஞ்சாயத்து நாட்டாண்மை நடந்து வருகின்றன
    அதை மாற்றும் வண்ணமாக ஜமாத்தார்கள் விளித்து கொண்டு புதிய
    நிவாகம் அமைய முயற்சி செய்து கொண்டு இருகிறார்கள் . நாம் தள்ள பட்டு
    விடுவோமா என்ற தால்புணர்ச்சி பயம் பழைய நிர்வாகத்திற்கு வந்து விட்டது
    ஆகையால் பல முற்சிகள் எடுகின்றனர் புதிய நிர்வாகம் வர கூடாது என்று
    தேர்தல் நடை பெற்றால் உண்மை அறிய கூடும் . அல்லாஹ் நேர்மையானவர்களை
    வெற்றி பெற செய்வான் . புதிய நிர்வாகம் வந்தால் பழைய நிவாகத்தின் ஊழல்
    வெளி வந்து விடும் . நீடூர் மக்கள் விளித்து கொள்ள வேண்டும்
    இப்படிக்கு
    நீடூர் நண்பன் துபாய்

    ReplyDelete
  3. A .R .சுலைமான் சேட்May 8, 2012 at 7:31 PM

    அஸ்ஸலாமு அழைக்கும்

    பள்ளிவாசல்கள் எனபது புனிதமானது - மத்ஹப் பள்ளியை வைத்து என்ன சாதித்தார்கள் இஸ்லாத்துக்காக?...என்று கேட்கும் சகோ அவர்களே

    நிர்வாகத்தை குறை கூறும்போது
    இறை இல்லத்தை குறை கூறுவதற்கு எவரும் தகுதியற்றவர் - முரண்பாடான செயல்கக்ளும் குர்ஆன்/ ஹதீஸில் இல்லாத நடைமுறைகளுக்கு எதிப்பு தெரிவிக்க வேண்டும் அதை விட்டுவிட்டு "மத்ஹப் பள்ளி" என்று முத்திரை குத்த வேண்டாம் - (ஏகத்துவம்) இறைப்பள்ளிக்கு எதிப்பு கொடுப்பவர்களிடம் உங்கள் கருத்துகளை சொல்லுங்கள் -
    இன்று இஸ்லாமியர்களின் ஊர் நீடூர் என்று நாம் சொல்வதற்கு பெருமை படவேண்டும் அதற்க்கு என்ன காரணம் இந்த இறை இல்லம் நாம் ஓத கர்க்கவில்லையா/தொழ கர்க்கவில்லையா இந்த பள்ளிவாசலில்
    இந்த சீரணி சோற்றையும், மவ்லீதையும் ? யாக வைத்து கால காலமாக இஸ்லாத்திற்காக என்ன செய்தார்கள் என்று சகோ நூருல் கேட்பது சாத்தியமற்றது.

    ReplyDelete
  4. irai illathai kurai avar kuraikooravillai nandraga orumurai paditthu paarungal mathab palli endral enna 4imamgalin toguppugalai avravargalin kaalakattatirku eatravaru hadeedgalil pathivu seithu irukkirargal nabigal naayagam avargal entha mathhabaiyavathu pinbattri irukkirargal endru ungalal quran & hadeehalil irundhu bathil koora mudiyuma ... moulidum seerani sorum nabigal nayagam kaatti thantha valiyaa markkatthil angeegarippatta seyala velore bakkiyathu saaligath moulidukku patwa kodutthai neengal ariveergala maarkkathil illatha visayangalai seivathai evvaru thaduttuargal enbathai neengal sinditthu paarungal

    ReplyDelete
  5. A .R .சுலைமான் சேட்May 8, 2012 at 8:41 PM

    சகோ அப்துல் ரஹ்மான் அவர்களே
    மத்ஹப் என்றால் 4 இமாம் அவர்களின் தொகுப்பு -
    தொழ ஓத கற்றுகொடுப்பது இறைப்பள்ளி அது நபிகள் நாயகம் ஸல் அவர்கள் நமக்கு கற்றுத்தந்தது.குர்ஆன்/ ஹதீஸில் இல்லாத
    நடைமுறைகளுக்கு
    சோற்றையும், மவ்லீதையும் ஒரு காரணமாக காட்டி சொல்வதைத்தான் நான் எழுதி இருந்தேன் அதற்காக குர்ஆன்/ ஹதீஸில் அதற்காக ஆதாரம் கான்பிக்க் முடிமா ஆதாரம் உள்ளதா எனபது தன்னை பார்த்து தானே கேற்கும் ? ஒரு புது குழப்பத்தை உருவாக்க வேண்டாம்

    இஸ்லாமிய இயக்கங்களே – நீங்கள் !
    வேற்றுமையில் ஒற்றுனை காண வேண்டாம் !
    ஒற்றுமையில் வேற்றுமை என்ன? கூறுங்கள் !

    ReplyDelete
  6. nanbare imamgal nabigal nayagattin valimurai appadiye pathivu seithargal islalatthaai mulumaiiyaga edtthu koorinargal athil illatha seithigalai kuruvathu evvalavu vibaridatthai earpaduttum enbathai neengal muthalil vilangikollungal tholugaiyai mattumalla manithanin pirappumudal irappuvarai ellavatraiyum telivu paduttivittargal nabigal nayam avargal hajjathul vida irudi uraiyil indha maarkam mulumaiyanduvittadu endrargale athan porul enna...

    ReplyDelete
  7. A .R .சுலைமான் சேட்May 8, 2012 at 10:01 PM

    இ்லா் ᾙᾨைமயாகி வி்டᾐ!
    ஒ்ேவாᾞ இைற்ᾑதாி் பிரா்தைனᾜ் (இ்ᾫலகிேலேய) ᾙᾊ்ᾐ வி்டன;
    எ் பிரா்்தைனைய் தவிர! நா் அைத மᾠைம நாᾦ்காக எ் இைறவனிட்
    ேசமி்ᾐ ைவ்திᾞ்கிேற். அறி்ᾐ ெகா்ᾦ்க்; மᾠைம நாளி்
    இைற்ᾑத்க் த்களᾐ சᾙதாய்தின் அதிகமாக இᾞ்பைத் க்ᾌ
    மகி்்சிᾜᾠவா்க். அ்ேபாᾐ எ்ைன நீ்க் ேகவல்பᾌ்தி விடாதீ்க்.
    நா் உ்கᾦ்காக க்ஸ் நீ் தடாக்தி்ு அᾞகி் உ்கா்்திᾞ்ேப்.
    (ம்மᾫ் ஸவாயிᾐ 271/3)
    ம்கேள! என்ு்பி் எ்த ஒ் இைற்ᾑதᾞ் இ்ைல; உ்கᾦ்ு்பி்
    எ்த ஒᾞ சᾙதாயᾙ் இ்ைல. (ளிலாᾤ் ஜ்னா 1061)

    ReplyDelete
  8. சகோ.சுலைமான்சேட் அவர்களே! நான் முத்திரை குத்தவிலை அவர்களே குத்தி வைத்திருக்கிறார்கள். தேவை என்றால் எனக்கு போன் செய்யுங்கள் சொல்கிறேன்00966502602397 காரணம் இது விவாத மேடையல்ல. மேலும் இறைபள்ளியை இறையச்சம் இல்லாதவர்கள் நிர்வகிக்கிறார்கள். அப்படி இருந்தால் என்ன செய்வது.? நபி(ஸல்)அவர்கள் காலத்தில் இறைபள்ளி எப்படி இருந்தது.? இப்போது எதற்கு பயன்படுகிறது? நான் சொன்ன அந்த இரண்டுக்குத்தான் அதை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். நாம் எந்த அமல் செய்தாலும அது இறைவனிடம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமெனில் அதற்கு இரண்டு நிபந்தனை உள்ளது.1. முதலில அந்த அமல் இறைவனுக்காக செய்யப்பட்டிருக்கவேண்டும். 2.இரண்டாவது் அது அல்லாஹ்வின் தூதர் காட்டியமுறைப்படி இருக்கவேண்டும். அப்படி இன்று நாம் செய்யும எல்லா அமலும் இருக்கிறதா? நிதானமாக சிந்தித்துப்பாருங்கள். உண்மை புரியும்.

    ReplyDelete
  9. A .R .சுலைமான் சேட்May 10, 2012 at 1:13 PM

    அஸ்ஸலாமு அழைக்கும்!
    நூருல் அவர்களே நீங்கள் " மத்ஹப் பள்ளி" என்று குறிப்பிட்டதால் தான் நான் உங்களிடம் முத்திரை குத்த வேண்டாம் என்றேன் பள்ளிவாசல் எனபது ஒவ்வொரு மூமீன்களுக்கும் இறைவன் தந்த சொத்து

    அத்தியாயம் 96 . சூரத்துல் அலஃக்!
    மனிதனுக்கு அவன் அறியாதவற்றை எல்லாம் கற்றுக் கொடுத்தான் எனினும் நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான் அவன் தன்னை (இறைவனிடம்) தேவையற்றவன் என்று காணும்போது நிச்சயமாக அல்லாஹ் பார்கிறான் என்பதை அவன் அறியவில்லையா...

    நபிகளார் அவர்களின் காலங்கள் & இக்காலங்கள்

    இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
    காட்டிய முறைப்படி முழுமையாக முஃமீன்கள் இருக்கவில்லை எனபது உண்மை!

    நபியே! உமக்கும், முஃமின்களில் உம்மைப் பின்பற்றுவோருக்கும் அல்லாஹ்வே போதுமானவன். (8:64)

    அல்லாஹ்வின் நல்லடியார்களே! நீங்கள் பொருளைத் தேடுங்கள்; செலவழியுங்கள் நெறி பிறழாமல் இன்பம் காணுங்கள்! ஆனால் இறை நம்பிக்கையுடன் செயல்படுங்கள் படைத்தவன் மீது நம்பிக்கை வைப்பதை விடுத்து பணத்தின் மீதும், பதவியின் மீதும்,தாங்கள் செய்யும் வியாபாரத்தின் மீதும், சொத்துகளின் மீதும் நம்பிக்கை வைக்கிறான் மனிதன். தன் பிடரி நரம்பினும் அண்மையிலுள்ள எல்லாம் வல்ல அல்லாஹ்வை மறந்தவனாக நன்றி கெட்டவனாக மனிதன் வாழ்வதில் இன்பம் காணுகிறான்.

    தன்கையில் இலட்ச இலட்சமாக பணம் உள்ளவன் தன்னால் தான் விரும்பியதை செய்ய இயலும் என இறுமாப்புக் கொள்கிறான். மேலும் பணமில்லாத தன் உடன் பிறந்தவர்களையே ஏளனமாக நோக்குகிறான். அவனுடைய ஏழ்மையின் காரணமாக அவன் வாழும் நெறியான வாழ்க்கை மீதே வீண் பழி சுமத்தவும் அஞ்சுவதில்லை. காரணம் தன்னிடம் உள்ள பணம் தன்னைக் காப்பாற்றும் மிகப்பெரிய சக்தியாக அவன் நினைக்கிறான்
    அடுத்து பதவியின் மீது தான் கொண்ட அபரிமிதமான நம்பிக்கை தன்னுடைய பதவியை எதனையும் சாதிக்கக்கூடிய, நினைத்ததை முடிக்கக்கூடிய அதிகாரம் படைத்ததாகக் கருதி செயல்படுகிறான். மேலும் கல்வியின் மீது கொண்ட நம்பிக்கையானது கல்வி கற்காதவர்களையும் அறிவற்றவர்களாக தகுதியில்லாதவர்களாக எண்ணும் அளவுக்கு ‘அறிவின் ஆணவம்’ போய்க் கொண்டிருக்கிறது.

    ReplyDelete