நமதூரில் நடக்கும் பல பிரச்சனைக்களுக்கும் நம் சகோதரர்கள் பலர் அமைதி காப்பதால் அவர்கள் மனஓட்டம் என்னவென்று அறிந்திட முடியவில்லை. உதாரணத்திற்கு இப்பொழுது இன்ஷா அல்லாஹ் நடக்கவிருக்கும் ரகசிய வாக்கெடுப்பை ஆதரிக்கின்றார்களா? அல்லது எதிர்க்கின்றார்களா? என்றுகூட தெரியவில்லை. ஊரில் நிர்வாகத்தினால் யாருக்கேனும் அநீதி இழைக்கப்பட்டால், அல்லது மிரட்டப்பட்டால் இவர்கள் எந்த கருத்தையும் தெரிவிக்காத காரணத்தினால் தான் அவர்கள் என்ன நினக்கின்றார்கள் என்று அறிந்திட முடியவில்லை. யாரும் அநீதிக்கு எதிராக குரல் கொடுக்காத போது தான் அநீதி செய்பவர்களுக்கு பயமில்லாமல் போகின்றது. நம் வீட்டில் கூட எல்லாரையும் போல நீங்களும் அமைதியாக இருங்கள், நமக்கே ஆயிரம் பிரச்சனைகள் உண்டு இதில் இந்த ஊர் பிரச்சனை வேறயா? என்று நம் வீட்டு பெண்கள் அறிவுறுத்துவதுண்டு. எல்லோருமே இப்படி ஒதுங்கி கொண்டால் யார் தான் இவர்களை கேட்பது? இதில் சிலர் கேள்வி கேட்கும் சிலரையும் விமர்சிக்கின்றனர். இவர்களையெல்லாம் எதில் சேர்ப்பது? .வெளிநாட்டில் உள்ளவர்களும் கூட ஊருக்கு வரும் சில நாட்களுக்கு ஊர் பிரச்சனை எதற்கு என எண்ணி எதிலும் பட்டும் படாமலும் இருந்துவிட்டு சென்று விடுகின்றனர். தன் வீட்டில் பிரச்சனை என்றால் பெரியவர்களை கூட்டி தீர்க்க முயல்கிறோம், முடியாதபட்சத்தில் ஜமாத்து நிர்வாகத்திடம் நியாயம் கிடைக்கும் என செல்கிறோம் ஆனால் இங்கே அந்த நிர்வாகிகளே சட்டத்தை மதிக்காதவர்களாக இருக்கும் போது யாரிடம் போய் நியாயம் கேட்பது? எனவே தான் நல்ல நிர்வாகம் அமைய ரகசிய வாக்கெடுப்பு முறை வேண்டும் என்று நீதிமன்றமத்தை அணுகி அதற்கான உத்தரவையும் பெற்றுள்ளனர். இது நம் ஊர் நன்மைக்காக மட்டுமே. இதற்காக பாடுபடுபவர்களுக்கு இந்த உலகில் என்ன பயன் இருக்கிறது? ஊர் நன்மை வேண்டியே இவர்கள் பாடுபடுகிறார்கள். அல்லாஹ் இவர்களுக்கு மறுமையில் பரிசளிப்பான். நிர்வாகத்தில் உள்ள சிலரும் அவர்களுக்கு சப்பை கட்டுகட்டுபவர்களும், ஊருக்காக பாடுபடுபவர்களை குறிப்பிட்ட இயக்கத்தை சார்ந்தவர்கள், இவர்கள் எப்போதும் ஊருக்கு எதிராகவே செயல்படுபவர்கள் என்ற பொய்யையும் உலவ விட்டுள்ளனர். எல்லோருக்கும் தெரியும் ஊருக்காக இப்போழுது நீதிமன்றம் அணுகி ரகசிய வாக்கெடுப்புக்கான உத்தரவை பெற்றவர்கள் எந்தவொரு இயக்கத்தையும் சாரதவர்களே!. ஊர் மக்களுக்கும் இது தெரியும். எனவே இன்ஷா அல்லாஹ் ரகசிய வாக்கெடுப்பை பல வழிகளில் கெடுக்க நினைக்கும் இந்த நிர்வாகத்தை மக்கள் புரிந்து கொண்டு மற்றவர்களிடம் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பொதுவாக ஊரில் நடக்கும் அநியாயங்களை யாரும் தட்டிகேட்பதில்லை, இதில் சிலரோ அதை தட்டி கேட்பவர்களை விமர்சிப்பதையே வேலையாகவும் கொண்டுள்ளனர். என்ன நடந்தது என தெரியாமலே சிலர் மற்றவர்களை புறம் பேசுகின்றனர். இதுபோல் நமக்கு ஏன் ஊர் வம்பு என ஒதுங்கி கொண்டு விமர்சனம் செய்பவர்கள் தனக்கு இத்தகைய சூழல் ஏற்படாது என எண்ணி கொண்டிருக்கிறார்களா? இவர்களை மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். எனவே இந்த தேர்தலுக்கு பாடுபடுபவர்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை!, விமர்சனம் என்ற பெயரில் உபத்திரம் செய்யாமல் இருந்தாலே போதுமானது. இன்ஷா அல்லாஹ் இதுபோல் விமர்சிப்பவர்களை நாம் உதாசினம் செய்துவிட்டு என்றும் ஒற்றுமையுடன் ஊர் நன்மைக்காக ரகசிய வாக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்தி காட்டுவோமாக! எதுக்கு ஊர் வம்பு என ஒதுங்கி கொள்ளாமல் நியாயத்தின் பக்கம் நின்று இம்மையிலும், மறுமையிலும் வெற்றி பெற அல்லாஹ் நம் அனைவருக்கும் உதவுவானாக! ஆமீன்.
நமக்கு ஏன்..? ஊர்வம்பு என்று இருப்பவர்கள் தன் குடுப்பத்தை கூட நல்வழி நடத்திட தகுதியற்றவர்கள்
ReplyDeleteதனிமனித உரிமை என்பது அவரவர் கருத்தை சொல்வது தெரிவிப்பது கேட்பதும் எல்லோருக்கும் வழங்கபடவேண்டும் இதற்கு அடிபடையே மார்க்கமாகும் முஹம்மத் நபியின் வாழ்க்கையே நமக்கு முன் மாதிரியாகும் கருத்துதொற்றுமையில் எல்லோரும் பங்கு கொள்வது அவசியமாகும் வஸ்ஸலாம்...
இவை தமாஷ் அல்ல உண்மையே! நீடூர் அயோக்கியர்களின் புகளிடமாக உள்ளது. இதை மாற்றவேண்டும். தாடியும் தொப்பியும் மக்களை ஏமாற்றவே இதை கடந்தகால பஞ்சாயத்து தலைவர் பதவியில் பார்த்தோம். தோற்றத்தைப்பார்த்து மக்கள் வாக்களித்தார்கள், ஆனால் வெற்றி பெற்ற பிறகுதான் உன்மை வேஷம் தெரிந்தது அனைவருக்கும். லஞ்சம் தலைவிரித்தாடியது வீட்டு மனை அப்புருவலுக்கு பணம், ஒரு மனை வாங்கியிருக்கிறார். இதற்கு இறைவனிடம் பதில் சொல்லியாக வேண்டும். நமதூரின் அனைத்து தனி மனிதனும் அவரிடம் எதற்காக சென்றாலும லஞ்சம வாங்காமல் அவர் விடுவதில்லை. அவர் நினைத்திருக்கலாம ஐந்த வருடம் வெற்றி பெற்றோம் என்று ஆனால் இறைவன் இந்த ஐந்து வருடத்தில் அவரை மக்களிடம் தோலுரித்து காட்டினான். அதனால் தான் இந்த தேர்தலில் 100 ஓட்டு கூட வாங்க வில்லை. இது இப்படி இருக்க பதவி வெறி விடுவதாக இல்லை. முத்தவல்லி, டிரஸ்டி எல்லாம் அல்லாஹ்ஹை பயந்தவர்கள் வரவேண்டும் இவர்கள் எல்லாம் தங்களின் பதவியை வைத்து வயிறு வளர்ப்பவர்கள். ஊரை அடித்து உலையில் போடுபவா்கள் மக்கள் விழிப்புனர்வு பெறவேண்டும். முதவல்லி பதவிக்கு தேர்தல் கூடாது என்றால் பஞ்சாயத்து தேர்தலில் நிற்கலாமா? அதற்கு ஓட்டு போடலாமா? இஸ்லாத்தையும, பள்ளி அசரத்துமார்களையும் (இவர்கள் ஆலிம்கள் இல்லை ஆலிம்கள் இறைவனுக்கு அஞ்சுவார்கள்) தங்கள் இஷ்டத்துக்கு வலைக்கிறர்கள். இதுகாலம வரை இல்லாத பெண்கள் ஜியாரத்து மதரஸாவில் இப்போது வரப்போகிறதாம்! என்ன கொடுமை ஷம்சுல்ஹீதா ஹஜ்ரத் இருந்தால் இவர்கள் இப்படிபேச முடியுமா? பாவம் இப்போதய நாஜிர் பதவிக்காக எதையும செய்ய தயார். ஹராமையும ஹலால் ஆக்குவார்கள். அல்லாஹ் நம்மை பாதுகாக்கவேண்டும்.
ReplyDelete