அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Friday, May 18, 2012

வரலாற்றிலேயே முதன் முறையாக ஊர் கூட்டத்தை வீடியோ பதிவு செய்த நீடூர் நிர்வாகம்.

சென்ற வாரம் ஊரில் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் எந்த ஊரிலும் இல்லாத வகையில் வீடியோவில் பதிவு செய்துள்ளனர். இதை பற்றி ஜமாத்தார்கள் கேட்டதற்கு நிர்வாகத்தை பற்றி தவறான செய்திகள் பரப்படுகின்றது, எனவே வீடியோவில் பதிவு செய்வதாக கூறியுள்ளனர். இது வரவேற்க வேண்டிய செயல்தான், ஆனால் இதை இவர்கள் எல்லா கூட்டத்திலும் நடைமுறைப்படுத்துவார்களா? கடந்த காலத்தில் நடந்த அடிதடிகளையும் பதிவு செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அப்படி செய்திருந்தால் கடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு பதவியாவது கிடைத்திருக்கும்!!. இப்பொழுது பதிவு செய்ததை உள்ளூர் இணையதளத்தில் வெளியிடுவார்களா? இதுபோல் இனிவரும் கூட்டங்களிலும், இன்ஷா அல்லாஹ் நடக்கப்போகின்ற ரகசிய வாக்கெடுப்பிலும் இதுபோல் வீடியோ பதிவு செய்யப்படுமா? அப்படி செய்து இணையதளத்தில் வெளியிட்டால் தான் மக்களுக்கும் ஊரில் என்ன நடக்கின்றது என்பது தெரியும், நிர்வாகம் தப்பாக நடக்கின்றதா? அல்லது இணையதளங்களில் தான் தப்பாக பரப்பப்படுகின்றதா? என்று மக்களுக்கு புரிந்துவிடும்.

வீடியோ பதிவு செய்த அந்த கூட்டத்தில் இரண்டு பெரியவர்களை அழைத்து சமாதான முயற்சியில் அவர்களை ஈடுபடுமாறு தீர்மானம் போட்டுள்ளீர்கள். இதை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தேர்தலின் போதும் அதன் பிறகு ஏற்பட்ட பிரச்சனைகளின் போதும் செய்திருந்தால் நல்லதாக இருந்திருக்கும். அப்படி செய்யாமல் ரகசிய வாக்கெடுப்பை எப்படியெல்லாம் தடுக்க முடியுமோ அதையெல்லாம் செய்து,  முடியாத பட்சத்தில் இந்த பெரியவர்களை கூப்பிட்டு சமாதானம் செய்ய கோரியுள்ளீர்கள்.இன்ஷா அல்லாஹ் எந்த வகையில் இவர்கள் முயற்சி செய்தாலும் கண்டிப்பாக ஜமாத்தார்கள் ரகசிய வாக்கெடுப்புப்பை வலியுறுத்துவதை நிறுத்தக்கூடாது. அப்படி செய்தால் கண்டிப்பாக இறைவன் நமக்கு துணைபுரிவான்.

No comments:

Post a Comment